பெண்கள் சொந்த காலில் நிற்கும் பொழுது தான் அவர்களுக்கான சுயமரியாதை கிடைக்கும்- மகளிர் தின விழாவில் ஜனாதிபதி விருது பெற்ற லதா சுந்தரம் பேச்சு...

published 11 months ago

பெண்கள் சொந்த காலில் நிற்கும் பொழுது தான் அவர்களுக்கான சுயமரியாதை கிடைக்கும்- மகளிர் தின விழாவில் ஜனாதிபதி விருது பெற்ற லதா சுந்தரம் பேச்சு...

கோவை: கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல் நர்சிங் கல்லூரியில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. கே.ஜி நிறுவனத்தின் தலைவர் பக்தவச்சலம் தலைமையில் நடைபெற்ற  மகளிர் தின விழாவில் சமூக பணிக்காக குடியரசு தலைவர் விருது பெற்ற லதா சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

 

இவ்விழாவில் சிறப்புரையாற்றிய லதா சுந்தரம், Women என்பதிலேயே Men இருப்பதால் இந்த நாள் ஆண்களுக்குமான நாள் என்றார். பெண்களின் ஸ்டேட்டஸை வைத்து தான் அந்நாட்டின் ஸ்டேட்டஸ் நிர்ணயிக்கப்படுவதாகவும் கூறினார். நான் அளிக்கும் மோட்டிவேஷன் பேச்சுகள் ஒரு நாள் முழுக்கவும் அளித்தாலும் உங்களுக்கு வராது எனவும் மோட்டிவேசனை உங்களுக்குள் நீங்கள் தான் வர வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். 

பெண்கள் ஒவ்வொருவருக்கும் கல்வி என்பது மிக முக்கியம் எனவும் அதேபோல்  சுயமரியாதை என்பதும் மிகவும் முக்கியம் என தெரிவித்தவர் நாம் நமது சொந்த காலில் நிற்கும் பொழுது தான் அந்த சுயமரியாதை என்பது கிடைக்கும் என தெரிவித்தார். நம்முடைய பாதுகாப்பை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும், உறங்கும் பொழுது கூட பெண்கள் விழிப்புடன் தான் இருக்க வேண்டும் என தெரிவித்தவர் அப்படிப்பட்ட நாட்டில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். 

எந்த ஒரு ஆண் குழந்தைக்கு அம்மாவின் அன்பும் அரவணைப்பும் கிடைக்கிறதோ அந்த ஆண் அனைத்து பெண்களிடமும் தன்மையுடன் நடந்து கொள்கிறான் என தெரிவித்தார். 
மேலும் அவரது வாழ்க்கையில் நடந்த பல்வேறு தடங்கல்களையும் அதிலிருந்து அவர் சாதித்து வந்ததையும் பகிர்ந்து கொண்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe