கொங்குநாடு கல்லூரி விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக கவர்னர்..!

published 11 months ago

கொங்குநாடு கல்லூரி விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக கவர்னர்..!

கோவை: கவுண்டம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் பொன்விழா ஆண்டு கலையரங்கம் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு கலையரங்கத்தினை திறந்து வைத்தார்.

 

இந்நிகழ்வில் மாணவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றிய ஆளுநர் பேசுகையில்,
சிவராத்திரி தின வாழ்த்துக்களையும் மகளிர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டார். 
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை வகுத்துள்ளதாக தெரிவித்தார்.
 

பெண்கள் முன்னேற்றத்திற்கு கல்வி ஒரு சிறந்த ஆயுதம் என குறிப்பிட்டவர், இந்தக் கல்லூரியில் அதிக அளவில் மாணவிகள் இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

பத்தாண்டுகளுக்கு முன்பு உலக அரங்கில் இந்தியா உரிய இடத்தை பெறவில்லை என்றும் இப்போது உலக அளவில் இந்தியாவின் நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக குறிப்பிட்டார். கடந்த பத்தாண்டுகளில் உலக பொருளாதரத்தில் பதினொன்றாவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளதாகவும் விரைவில் மூன்றாம் இடம் பிடிக்க உள்ளதாகவும் கூறினார் இதற்கு இளம் தலைமுறையினரின் பங்களிப்பு மிகவும் முக்கியம் என குறிப்பிட்டார்.

பெண்கள் முன்னெடுத்துச் செல்லும் முன்னேற்றமாக நாடு வளர்ச்சி அடைந்து வருவதாகவும் பெண்களுக்கான கல்வி சுகாதாரம் ஆகியவற்றுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக கூறினார்.
 

இன்றைக்கு பெண்கள் பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்து வருவதாகவும் பெண்கள் தொழில் முனைவோராக உருவாவதில் மத்திய அரசின் முத்ரா கடன் உதவி திட்டம் பயனுள்ளதாக அமைந்ததாக குறிப்பிட்டார்.

மத்திய அரசின் ஜந்தன் திட்டம் அனைவருக்கும் ஆன வீடு திட்டம் ஆகியவற்றில் பெருமளவில் மகளிர் பயன்பெற்றுள்ளதாக  கூறினார்.
பெண்கள் தற்போது நிலவுக்கும் சூரியனுக்கும் விண்வெளி அனுப்புவதில் பங்களித்து வருவதாகவும் விமானப்படையில் பெண்கள் சிறப்பான வகையில் சேவை செய்து வருவதாகவும் குறிப்பிட்டார். 

பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் அதிக அளவில் பெண்கள் அரசியல் தலைவர்களாக ஆட்சியாளர்களாக உருவாக்குவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe