கோவைக்கான புதிய திட்டங்களை வரிசையாக அடுக்கிய ஸ்டாலின்!

published 11 months ago

கோவைக்கான புதிய திட்டங்களை வரிசையாக அடுக்கிய ஸ்டாலின்!

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், கோவைக்கு வரவுள்ள புதிய திட்டங்கள் குறித்து அறிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:

கோவைக்கு புதிய திட்டங்களை வெளியிட விரும்புகிறேன்; தென்னை மரங்களை அதிகமாக பாதிக்கும் வேர் வாடல் நோய் இருக்கிறது. அப்படி வேட் வாடல் நோய் அதிகமாக இருக்கும் மரங்களை வெட்டி அகற்றுவதற்காக ரூ.14.4 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்.

3 லட்சம் தென்னங்கன்றுகள் ரூ.2.80 கோடியில் உழவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

அகில இந்திய அளவில் தேங்காய் விற்பனை செய்ய உரிய சந்தை வாய்ப்புகள் ஏற்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் செயல்படும் 157 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் வெளி மாநில வணிகர்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்து அதனால் வேளாண் பெருமக்கள் தேங்காய் விற்பனை செய்வதை ஊக்குவிப்போம்.

விற்பனை செய்யும் தேங்காய்க்காக பணம் விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். தென்னை விவசாயிகள் நலம் கருதி கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் தேங்காய் நேரடியாக கொள்முதல் செய்து கூட்டுறவு சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் நுகர்வோர்களுக்கு விற்பனை செய்யப்படும்.

விளாமரத்தூர் சாலை முதல் அத்திக்கடவு அணை வரை 8.2 கிலோமீட்டரில் ரூ.ஒன்பது கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கப்படும். மூங்கில் மடை குட்டை பழங்குடியினர் பகுதியில் 57 லட்சம் ரூபாய் மதிப்பில் வடிகால் அமைக்கப்படும்.

மதுக்கரை ஊராட்சி ஒன்றியம், மாவூத்தம்பதி வாளையார் வனப்பகுதியில் தரைமட்ட குடிநீர் தொட்டி கட்டி தரப்படும். காரமடை, ஆனைமலை, சூலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.4.39 கோடியில் புதிய சாலைகள் அமைக்கப்படும்.

இக்கரை போலுவாம்பட்டி ஊராட்சி, பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், திவான் சா புதூர், சோமயம்பாளையம் ஊராட்சி மதுக்கரை ஊராட்சி ஒன்றியங்களில் நான்கு பாலங்கள் கட்டப்படும். 15 அங்கன்வாடி மையங்கள், 18 நியாய விலை கடைகள், 14 சமுதாய நலக்கூடங்கள், 7 பேரூராட்சிகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்படும்.

கோவை அரசு மருத்துவமனை கல்லூரியில் மழை நீர் வடிகால், கான்கிரீட் சாலை 10 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும். உக்கடம் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டு வரும் மேம்பாலதால் அகற்றப்பட்ட பேருந்து நிலையம் ரூ.20 கோடி ரூபாய் மதிப்பில் நவீன முறையில் சீரமைக்கப்படும்

ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பில் ஹாக்கி விளையாட்டு தரை அமைக்கப்படும். 
இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe