கோவையில் மூதாட்டியை தள்ளும் காட்டு யானை; பகீர் வீடியோ உள்ளே!

published 11 months ago

கோவையில் மூதாட்டியை தள்ளும் காட்டு யானை; பகீர் வீடியோ உள்ளே!

கோவை: கோவை மாவட்டத்தில் மதுக்கரை, தடாகம், பன்னிமடை, மருதமலை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாகவே தென்படுகிறது. 

வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விலை நிலங்களை சேதப்படுத்துவதாக விவசாயிகளும் பொதுமக்களும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். சில சமயங்களில் வனவிலங்கு- மனித மோதல்களும் ஏற்படுகின்றன.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மதுக்கரை வனசரகத்திற்குட்பட்ட கரடிமடை பகுதியில் காட்டுயானை ஒன்று ஊருகுள் புகுந்துள்ளது. தொடர்ந்து அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகே விஷ்ணு என்பவரின்  தோட்டத்திற்க்குள் புகுந்துள்ளது. அப்போது தோட்டத்து  வீட்டு வாசலில்   உறங்கி கொண்டிருந்த நாகம்மாள்(70) என்ற மூதாட்டி சத்தம் கேட்டு  பார்த்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக அருகில்  வந்த காட்டு யானை   மூதாட்டியை தாக்கி கீழே தள்ளியது. இதில் மூதாட்டிற்கு காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் நாகம்மாளை காட்டு யானை தள்ளி விடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

சிசிடிவி காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtube.com/shorts/H9edup-PiVw?si=HSEO7olGJB-ULcz2

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe