கோவையில் பங்குகளை விற்று அதிக வருமானம் ஈட்டலாம் என கூறி 38.50 லட்சம் மோசடி...

published 11 months ago

கோவையில் பங்குகளை விற்று அதிக வருமானம் ஈட்டலாம் என கூறி 38.50 லட்சம் மோசடி...

கோவை: கோவை சிங்காநல்லூர் நாராயணசாமி நகரை சேர்ந்தவர் ரமேஷ் பழனியப்பன்(43). இவர் காந்திபுரம் பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வாட்ஸ் ஆப்-க்கு குறுந்தகவல் வந்தது. அதில், தங்களது நிறுவன பங்குகளை வாங்கி விற்று கொடுத்தால் அதிக லாபம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து ரமேஷ் பழனியப்பன் அதில் உள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு விவரம் கேட்டார்.

அப்போது பேசிய மர்ம நபர், நாங்கள் அறிவித்துள்ள இந்த வாய்ப்பு மார்க்கெட்டில் புதியது. இதில் நீங்கள் முதலீடு செய்தால் அதிகமாக சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறினார். இதனை நம்பிய ரமேஷ் பழனியப்பன் அந்த நபர் கூறிய வெவ்வேறு வங்கி கணக்குகளில் ரூ. 38.50 லட்சம் செலுத்தினார். இதன்மூலம் அவர் அந்த நிறுவனத்தின் 11,300 பங்குகளை வாங்கினார். 

ஆனால் அந்த நபர் கூறியபடி ரமேஷ் பழனியப்பனுக்கு எந்த விதமான லாப தொகையும் கிடைக்கவில்லை. மீண்டும் அந்த நபரை தொடர்பு கொண்டு கேட்டபோது மேலும் பணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். 

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரமேஷ் பழனியப்பன் கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe