கோவையில் பிரதமரின் ரோடு ஷோவிற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது...

published 11 months ago

கோவையில் பிரதமரின் ரோடு ஷோவிற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது...

கோவை: கோயம்புத்தூரில் பிரதமர் மோடியின் ரோடு ஷோவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளது.

வருகின்ற திங்கட்கிழமை(18.03.2024) கோவையில்  நடைபெற இருந்த பிரதமரின் ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்க கோவை மாநகர காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

18 ம் தேதி கோவை மேட்டுப்பாளையம் சாலை எருக்கம்பெனி பகுதயில்இ இருந்து ஆர்.எஸ்.புரம் வரை பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடக்க இருந்தது. 

கோவையில் பிரதமர் பங்கேற்க இருந்த பா.ஜ.க.வின் ரோடு ஷோவுக்கு கோவை மாநகர காவல் ஆணையர் அனுமதி மறுத்தார். பாதுகாப்பு காரணங்களுக்காகவும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவதாலும் அவ்வழியே மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ்கள் அடிக்கடி செல்வதாலும் அனுமதி மறுக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. 

இந்நிலையில் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக வழக்கு தொடுத்த நிலையில் அவசர வழக்காக இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ரோடு ஷோக்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe