சுத்தமாகுது நம்ம கோவை!

published 11 months ago

சுத்தமாகுது நம்ம கோவை!

கோவை: அரசியல் போஸ்டர்கள், விளம்பரங்களால் அலங்கோலம் கண்டிருந்த கோவையின் சுவர்கள் தற்போது சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற சிறந்த ஊர்களின் பட்டியலை வரிசைப்படுத்தினால் அதில் முதலிடத்தில் நம்ம கோவை இருக்கும்.

அழகான சூழலும், அமைதியான மக்களும் உள்ள இந்த ஊரில் கடந்த சில ஆண்டுகளாகவே போஸ்டர் கலாச்சாரம் தலை தூக்கி உள்ளது.

நகரில் எந்தெந்த அரசு சுவர்கள் காலியாக இருக்கிறதோ அத்தனையிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு நகரின் எழிலே வற்றிப்போனது.

இந்த போஸ்டர் கலாச்சாரத்தை ஒழிக்க முடியாமல் திணறிய கோவை மாநகராட்சி ஒரு திட்டமிட்டது. அதன்படி, மேம்பால தூண்களில் தேசப்பற்று ஓவியங்கள், தமிழர் வரலாற்றை பறைசாற்றும் ஓவியங்களை சில மேம்பாலங்களில் வரைந்ததால் அங்கு போஸ்டர் கலாச்சாரம் தடுக்கப்பட்டது.

ஆனாலும் கோவை மாநகரை சுற்றிலும் திரும்பிய திசை எல்லாம் இப்போதும் போஸ்டர்கள் தெரிகின்றன.

போஸ்டர் கலாச்சாரம் கோவையை விட சென்னையில் பல மடங்கு அதிகம். அங்கு சிலர் அரசியல் போஸ்டர்களை தாண்டி, சுய விளம்பரம் செய்து கொள்வதற்காகவே போஸ்டர்கள் அடித்து சுவர்களில் ஒட்டி வருகின்றனர் . சிலர், கல்யாணம் முதல் கருமாதி வரை அனைத்தையும் போஸ்டராக ஒட்டுகின்றனர்.

இதனால் சென்னையின் அழகு பாழ்பட்டுப்போனது. இதற்கெல்லாம் ஆரம்பப்புள்ளியாக இருந்தது அரசியல் போஸ்டர்கள் தான்.

அந்த வகையிலேயே தற்போது அரசியல் போஸ்டர்கள் அடிக்கடி கோவையில் ஒட்டப்பட்டு வருகின்றன. சில போஸ்டர்களில் வன்மத்தை தூண்டும் விதமாக வசனங்கள் இடம் பெறுகின்றன.

இதனால் அமைதியான கோவைக்கு அவ்வப்போது அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

இதனிடைய வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த விதிகளின்படி நாடெங்கும் உள்ள சுவர்களில் அரசியல் போஸ்டர்கள் அரசியல்,  விளம்பரங்கள் இருக்கக் கூடாது.

இதனால் கோவை மாநகரில் தற்போது அரசியல் போஸ்டர்கள், அது குறித்த சுவர் ஓவியங்களை அழித்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இதனால் நகரின் எழில் மெல்ல மெல்ல மீண்டு வருகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe