மோடி ரோட் ஷோவில் பள்ளி மாணவர்கள்- பள்ளி தலைமை ஆசிரியையிடம் விசாரணை...

published 11 months ago

மோடி ரோட் ஷோவில் பள்ளி மாணவர்கள்- பள்ளி தலைமை ஆசிரியையிடம் விசாரணை...

கோவை: கோவையில் நேற்று பிரதமர் கலந்துகொண்ட ரோடு ஷோ நிகழ்ச்சியில் ஸ்ரீ சாய்பாபா வித்யாலயம் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனர். 

அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான  கிராந்திகுமார் பாடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் தொழிலாளர் துறையின் இணை ஆணையர் ஆகியோரிடம் விசாரணை நடத்த உத்திரவிட்டுள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

பிரதமர் மோடியின் ரோடு ஷோவில், மாணவிகள் பங்கேற்றது குறித்து, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு, விளக்கம் கேட்டு  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பினார். 

ஷ்காலர் ஷிப்பில் படிக்க DJ Tuition குழுவில் இணையலாம்

https://chat.whatsapp.com/KR30D92FDtgHxyrSYs10Ms

அதில்  ,தேர்தல் பிரச்சாரம் போன்ற செயல்பாடுகளுக்கு குழந்தைகளை பயன்படுத்தக்கூடாது என்ற தேர்தல் விதிமுறைகளை மீறி மாணவ, மாணவிகளை அழைத்து சென்றுள்ளதாக ஊடகங்களின் வழியாக தெரிய வந்துள்ளதாக அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்நிகழ்விற்கு மாணவர்களை அழைத்து சென்ற தலைமை ஆசிரியர் ,  ஆசிரியர்கள் மீது கடிதம் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கவும்,  பள்ளி நிர்வாகத்திற்கு  உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அதனடிப்படையில் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் புனிதா, அந்தோணியம்மாள், மற்றும் தொழிலாளர் துறையின் இணை ஆணையர் பள்ளி தலைமையாசிரியை புகழ்வடிவு மற்றும் மற்றும் மாணவிகள் , ஆசிரியர்களிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

விசாராணையின்  முடிவில் தலைமையாசிரியர், ஆசிரியர், மாணவிகளின் விளக்கத்தை எழுத்துப்பூர்வாக எழுதி வாங்கி விட்டு கிளம்பினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe