Breaking திமுக., வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கோவை, பொள்ளாச்சி, நீலகிரிக்கு யார்?

published 11 months ago

Breaking திமுக., வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கோவை, பொள்ளாச்சி, நீலகிரிக்கு யார்?

 

கோவை: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க., சார்பில் வேட்பாளர் அறிவிப்பு மற்றும் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது.

இதில் தி.முக., சார்பில் 21  நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

அதன்படி, கோவை நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க., சார்பில்  கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார்.

ஷ்காலர் ஷிப்பில் படிக்க DJ Tuition குழுவில் இணையலாம்
https://chat.whatsapp.com/KR30D92FDtgHxyrSYs10Ms

இவர் அ.தி.மு.க.,வில் மாவட்டச் செயலாளராகவும், அ.தி.மு.க., ஆட்சியின் போது 2014ல்  கோவையின் 5வது மேயராகவும் பதவி வகித்தவர். பின்னர் அ.தி.மு.க.,வில் இருந்து விலகி தி.மு.க.,வில் இணைந்தார்.

2014ம் ஆண்டு மாநகராட்சி மேயர் தேர்தலின் போது பா.ஜ.க., வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொள்ளாச்சி தொகுதியில் ஈஸ்வரசாமி போட்டியிடுவதாகவும், நீலகிரி தொகுதியில் ஆ.ராசா போட்டியிடுவதாகவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுகவின் 21  வேட்பாளர்கள் பட்டியல்:

1,தூத்துக்குடி- கனிமொழி,

2,தென்காசி -டாக்டர்.ராணி ஸ்ரீகுமார்.

3,வடசென்னை- டாக்டர் கலாநிதி வீராசாமி,

4,தென்சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன்,

5,மத்தியசென்னை- தயாநிதி மாறன்,

6,ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு,

7,காஞ்சீபுரம் - ஜி.செல்வம்,

8,அரக்கோணம்- எஸ்.ஜெகத்ரட்சகன்,

9,திருவண்ணாமலை- அண்ணாதுரை

10,தர்மபுரி- ஆ.மணி

11,ஆரணி-தரணிவேந்தன்

12,வேலூர்- கதிர் ஆனந்த்,

13,கள்ளக்குறிச்சி- மலையரசன்

14,சேலம்-செல்வகணபதி

15,கோயம்புத்தூர் - கணபதி ராஜ்குமார்.

16,பெரம்பலூர் - அருண் நேரு

17,நீலகிரி - ஆ.ராசா,

18,பொள்ளாச்சி-  ஈஸ்வரசாமி

19,தஞ்சாவூர் - முரசொலி

20,ஈரோடு-பிரகாஷ்

21,தேனி- தங்க தமிழ்செல்வன்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe