தி.மு.க., தேர்தல் அறிக்கை..! - என்னென்ன சிறப்பம்சங்கள்?

published 11 months ago

தி.மு.க., தேர்தல் அறிக்கை..! - என்னென்ன சிறப்பம்சங்கள்?

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க., சார்பில் வேட்பாளர் அறிவிப்பு மற்றும் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது.

இதில் தி.முக., சார்பில் 21  நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டர். மேலும், தேர்தலுக்கான அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.

தி.மு.க., தேர்தல் அறிக்கை பின்வருமாறு:

மாநிலங்கள் சுய ஆட்சி செய்யும் வகையில் இந்திய அரசியல் சட்டம் திருத்தப்படும்.

மாநில முதல்வர் ஆலோசனையின் படி கவர்னர் நியமனம்.

சென்னையில் சுப்ரீம் கோர்ட் கிளை.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து

மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுகள் அந்தந்த மாநில மொழிகளில் தேர்வு நடத்தப்படும்.

மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்.

திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.

அனைத்து மாநில மொழிக்கும் சமமான நிதி.

ஷ்காலர் ஷிப்பில் படிக்க DJ Tuition குழுவில் இணையலாம் https://chat.whatsapp.com/KR30D92FDtgHxyrSYs10Ms

தாயகம் திரும்பிய இலங்கை தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை.

ரயில்வே துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை.

புதிய கல்விக்கொள்கை ரத்து.

பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும்,

நாடு முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம்.

இந்தியா முழுவதும் மகளிர் உரிமைத்தொகை.

தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு.

முதலமைச்சர்களைக் கொண்ட மாநில வளர்ச்சிக்குழு அமைக்கப்படும்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.10 லட்சம் வட்டியில்லாக்கடன்

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலும் அகற்றப்படும்.

வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாதபோது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்.

குடியுரிமை திருத்தச்சட்டம் ரத்து செய்யப்படும்.

நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு

ஜி.எஸ்.டி.,ல் திருத்தம்

உழவர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை.

மாணவர்கள் கல்விக்கட்டணம் ரத்து.

விமானக்கட்டணம் முறைப்படுத்தப்படும்.

எல்.பி.ஜி., சிலிண்டர் விலை ரூ.500, பெட்ரோல் விலை ரூ.75, டீசல் விலை ரூ.65ஆக குறைக்கப்படும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக  வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை நாட்கள் 150ஆகவும், ஊதியம் ரூ.400 ஆகவும் உயர்த்தப்படும்.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில் அமைக்கப்படும்.

பா.ஜ., கொண்டு வந்த சட்டங்கள் மறு பரிசீலனை செய்யப்படும்.

மாணவர்களுக்கு வட்டியில்லாமல் ரூ.4 லட்சம் வரை கடன்.

ரயில்வே கட்டண சலுகைகள் மீண்டும் வழங்கப்படும்.

சச்சார் கமிட்டி பரிந்துரைகள் செயல்படுத்தப்படும்.

சென்னையில் மூன்றாவது ரயில் முனையம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe