கோவையில் 108 மதுபாட்டில்கள் பறிமுதல்...

published 10 months ago

கோவையில் 108 மதுபாட்டில்கள் பறிமுதல்...

கோவை: கோவை தடாகம் சாலை, கோவில் மேட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் கவுண்டம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப் இன்ஸ்பெக்டர் சந்திரமூர்த்திஆகியோர்  திடீர் சோதனை நடத்தி உள்ளனர்.

அப்போது அங்கு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாக மது பாட்டில்களை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஷ்காலர் ஷிப்பில் படிக்க DJ Tuition குழுவில் இணையலாம்…

https://chat.whatsapp.com/KR30D92FDtgHxyrSYs10Ms

இது தொடர்பாக கேஷியரான கவுண்டம்பாளையம் அம்மன் நகரை சேர்ந்த நாகராஜ் ( வயது 38 )கைது செய்யப்பட்டார். மேலும் 108 மது பாட்டில்களும், மது விற்ற பணம் ரூ 33 ஆயிரத்து 650 பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் சம்பந்தப்பட்ட ரமேஷ் குமார் ,பார் சூப்பர்வைசர் ராஜேஷ், விற்பனையாளர் குண்டன் ஆகியோர் தப்பி ஓடி விட்ட நிலையில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe