எந்த மொழில பேசனும்.. பேசிக்காட்டவா? அ.தி.மு.க., கோவை வேட்பளர் செய்த மாஸ் சம்பவம்!

published 10 months ago

எந்த மொழில பேசனும்.. பேசிக்காட்டவா? அ.தி.மு.க., கோவை வேட்பளர் செய்த மாஸ் சம்பவம்!

கோவை: கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கோவை, பொள்ளாச்சி,நீலகிரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

 

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி,முன்னாள் துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அதிமுக வேட்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதில் பேசிய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், “கரூரில் இருந்து ஒருவர் கோவைக்கு வந்து போட்டியிடுகிறார் அவர் திமுக வேட்பாளர் பெயரை சொல்கிறார்.

ஆனால் எனது பெயரை சொல்ல மறுக்கிறார்.புரட்சி தலைவி வைத்த புரட்சி தலைவரின் பெயர் என்பதால் எனது பெயரை சொல்ல பயமா? எனவும் அண்ணாமலை கரூரில் நின்றால் டெபாசிட் கிடைக்காது என்பதால் கோவையில் வந்து போட்டியிடுவதாகவும் ஒரு கரூர்காரர் ஜெயிலில் இருக்கிறார் அவர் வெளியே வர இன்னொரு கரூர்காரரை ஜெயிக்க வைக்க டம்மி வேட்பாளரை நிறுத்தியுள்ளார்கள் என வாட்ஸ் அப் குழுபில் வந்தது என்றவர் அது உண்மையா‌ எனத் தெரியவில்லை என்றார்.


 

ஷ்காலர் ஷிப்பில் படிக்க DJ Tuition குழுவில் இணையலாம்...

https://chat.whatsapp.com/KR30D92FDtgHxyrSYs10Ms

நாடாளுமன்றத்தில் தமிழ், ஆங்கிலம்,இந்தி, தெலுங்கு என எந்த மொழியிலும் பேச நான் தயார் என்றவர்  அண்ணாமலை பயப்படுவதாகவும் நான் பயப்படுவதாக நினைத்து  விடக்கூடாது என்றவர் அவருக்கு  நான் சவால் விடுகிறேன் என்னுடன் கோவையின் வளர்ச்சி குறித்து பேச தயாரா? எனவும் நேரம் இடத்தை குறித்து வாருங்கள். விவாதிக்க நான் தயார் இருக்கிறேன் என்றார். அதிமுக தொண்டர்களின் உணர்வை புண்படுத்திய அண்ணாமலை வேலுமணி கோட்டையில் வந்து நின்றால் ஜெயிக்க விட்டு விடுவோமா?” எனவும் தெரிவித்தார்.

வீடியோ காட்சியை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtube.com/shorts/WG3_5nwnSjw?feature=share

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe