கோவையில் 6 அரசு பேருந்துகளை ஜப்தி செய்த நீதிமன்றம்

published 2 years ago

கோவையில் 6 அரசு பேருந்துகளை ஜப்தி செய்த நீதிமன்றம்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :  https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை: விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு நீதிமன்ற உத்தரவின்படி போக்குவரத்துக் கழகம் சார்பில் உரிய இழப்பீடு வழங்கப்படாததையடுத்து 6 அரசுப் பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டன.

கோவை மாவட்டம், அப்பாச்சிக்கவுண்டன்பதியைச் சேர்ந்தவர் காளிமுத்து (27). இவர் விவசாயக் கூலியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 2017 செப்டம்பரில், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது உறவினரைப் பார்ப்பதற்காக வந்துவிட்டு திரும்பிச் சென்றார்.

அப்போது சாலை நடுவே இருந்த தடுப்பின் அருகே நின்று கொண்டிருந்த காளிமுத்து மீது அவ்வழியே வந்த அரசுப் பேருந்து மோதியதில் காளிமுத்து படுகாயமடைந்தார். பல மாதங்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதால் தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாகக் கூறி இழப்பீடு கோரி மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் காளிமுத்து வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், காளிமுத்துவுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு ரூ.12 லட்சத்து 83ஆயிரம் ரூபாயை 7.5 சதவீத வட்டியுடன் இழப்பீடாக வழங்குமாறு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு கடந்த 2019ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த உத்தரவை நிறைவேற்றாமல் போக்குவரத்துக் கழகம் காலம் தாழ்த்தி வந்தது. தொடர்ந்து, உத்தரவை நிறைவேற்றக் கோரும் மனுவை காளிமுத்து தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.முனிராஜா, நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படாததையடுத்து, 6 அரசுப் பேருந்துகளை ஜப்தி செய்ய  உத்தரவிட்டார்.

இதையடுத்து கணுவாய், வாளையாறு, துடியலூர், கிணத்துக்கடவு வழித்தடங்களில் இயக்கப்பட்ட 6 அரசுப் பேருந்துகளை ஜப்தி செய்த நீதிமன்ற ஊழியர்கள் அவற்றை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தினர்.
இதையடுத்து நீதிமன்றத்துக்கு வந்த போக்குவரத்துக் கழக அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவின்படி ரூ.14.80 லட்சத்தை இழப்பீடாக வழங்கினர். இதையடுத்து ஜப்தி செய்யப்பட்ட பேருந்துகளை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe