ஹெல்மெட் போட்டா பரிசு: திருவாரூர் பல்கலை மாணவர்கள் விழிப்புணர்வு!

published 10 months ago

ஹெல்மெட் போட்டா பரிசு: திருவாரூர் பல்கலை மாணவர்கள் விழிப்புணர்வு!

திருவாரூர்: ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து திருவாரூர் பல்கலை மாணவர்கள் இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். அதன் ஒரு பகுதியாக, போக்குவரத்து விதிகளை கடைபிடித்து, ஹெல்மெட் அணிந்து பயணிப்போருக்கு பரிசுகளை வழங்கி குஷிப்படுத்தினர்.

இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக போலீசாரும், தன்னார்வலர்களும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே 100% ஹெல்மெட் அணிவதை வலியுறுத்தி திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகத்தின் டிஜிட்டல் ஜர்னலிசம் மாணவர்கள் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

போக்குவரத்து போலீசாருடன் இணைந்து நடத்திய இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளர் சுப்ரமணியன் உள்ளிட்ட போலீசார் பங்கேற்றனர். 

தொடர்ந்து, ஹெல்மெட் அணிந்து, சாலை விதிகளை முறையாக கடைபிடித்த வாகன ஓட்டிகளுக்கு பேனா மற்றும் இனிப்புகளை பரிசாக வழங்கினர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை பல்கலைக்கழக பேராசிரியர் நவீன் ஒருங்கிணைத்தார். இதில், 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe