பிரேமலு ஓ.டி.டி., ரிலீஸ் எப்போது? வெளியான சூப்பர் அறிவிப்பு!

published 10 months ago

பிரேமலு ஓ.டி.டி., ரிலீஸ் எப்போது? வெளியான சூப்பர் அறிவிப்பு!

நல்ல கதைகளம் கொண்ட மலையாள படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று சர்வதேச அளவில் கவனத்தை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வகையில் மலையாளப் படங்களான மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு, ஆடு ஜீவிதம் போன்ற படங்கள் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்துள்ளன.

பிப்ரவரி 9ம் தேதி மலையாளத்தில் வெளியான பிரேமலு படம் கேரளாவில் பட்டயை கிளம்பியது. இதனைத் தொடர்ந்து தமிழில்  டப்பிங்க் செய்யப்பட்டு கடந்த மார்ச் 15ம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது.

இந்தப் படம் காமெடி மற்றும் காதலை மையமாக கொண்டு நகர்கிறது. ரூ.5 கோடி பட்ஜெட்டில் படத்தை இயக்குனர் கிரிஷ் எடுத்துள்ளார். நஸ்ரின் கே கபூர், மேத்யூ தாமஸ், மமீதா பைஜூ, சங்கீத் பிரதாப், அகில பார்க்கவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்  நடித்துள்ளனர்.

சர்வதேச அளவில் ரூ.128 கோடி வசூல் ஈட்டி சாதனைப் படைத்துள்ளது. நடிகர் மோகன்லால் நடித்த லூசிபர் படத்தின் வசூலை முறியடித்துள்ளதொடு, மலையாள திரையுலகில் அதிகமான வசூல் செய்த படத்தில் 4-ஆம் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரேமலு படம் மார்ச் 29ம் தேதி ஓ.டி.டி.,யில் வெளியாகும் எனக் கூறப்பட நிலையில், ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

படத்தின் ஓ.டி.டி., ரிலீஸ்  ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதாவது ஓ.டி.டி., தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe