மிருணாள் தாக்கூருக்கு கோடியில் குவியும் சொத்துகள்..! பல கோடியில் கார்!

published 10 months ago

மிருணாள் தாக்கூருக்கு கோடியில் குவியும் சொத்துகள்..! பல கோடியில் கார்!

பிரபல முன்னணி நடிகை மிருணாள் தாக்கூரின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிருணாள் தாக்கூர்

நடிகை மிருணாள் தாக்கூர் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான சீதா ராமம் படத்தில் நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர். இவர் வெள்ளித் திரையில் கதாநாயகியாக அறிமுகமாவதற்கு முன்னரே ஹிந்தி சீரியல்களில் நடித்து  வந்தார்.

ரூ.3 கோடி சம்பளம்

சீதாராமம் படத்தில் நடித்த பின்னர் தற்போது இவர் முன்னணி நடிகைகளுள் ஒருவராக  வலம் வருகிறார். சமீபத்தில் ‘ஹாய் நான்னா’ என்ற தெலுங்குப் படத்தில் நடிகர் நானிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதில் நடிக்க இவர் சுமார் ரூ.3 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி இருந்தன.

மேலும் பாக்ஸ் ஆபீஸ் மற்றும் விமர்சன ரீதியாக இந்தப் படம் வரவேற்பை பெற்றது. தற்போது நடிகை மிருணாள் தாக்கூர் விஜய் தேவரகொண்டாவுடன் ‘ஃபேமிலி ஸ்டார்’ என்ற படத்தில் கமிட் ஆகி  நடித்து வருகிறார். தொடர்ந்து ஹிந்தியிலும் பூஜா மேரி ஜான் என்ற படத்திலும் நடிக்கிறார்.

சொத்து மதிப்பு 

இந்த நிலையில் நடிகை மிருணாள் தாக்கூரின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இவரின்  சொத்து மதிப்பு படிப்படியாக உயர்ந்து  வருகிறது. திரைப்படத்தில் நடிக்க  ரூ.2 கோடி சம்பளம் வாங்கும்  இவரின் தற்போதைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 33 கோடி இருக்கும் எனக்  கூறப்படுகிறது.

ஆடம்பர சொகுசு கார்

மேலும்  மும்பையில்  தனது பெற்றோருடன்  வசித்து வரும் அவர், பல ஆடம்பர சொகுசு கார்களையும்  வைத்துள்ளார். 30 லட்சம் மதிப்புள்ள டொயோட்டா ஃபார்ச்சூனர் கார், 45 லட்சம் மதிப்புள்ள ஹோண்டா அக்கார்டு கார் வைத்திருக்கிறார்.

சமீபத்தில் ரூ. 2.17 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ் காரையும் வாங்கியுள்ளார். மேலும் சில ஆடம்பர ஹேண்ட் பேக்குகளையும் வைத்துள்ளார் என தகவல்கள் கூறுகின்றன.

வெள்ளித்திரையில் அறிமுகமாகி சில ஆண்டுகளே கடந்துள்ள நிலையில், மிருணாள் தாக்கூரின் சொத்து மதிப்பு ரசிகர்களை வாயடைக்க செய்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe