கோவை மக்களே போலீசாருடன் இணைந்து பணிபுரிய விருப்பமா? அழைக்கிறது காவல்துறை!

published 10 months ago

கோவை மக்களே போலீசாருடன் இணைந்து பணிபுரிய விருப்பமா? அழைக்கிறது காவல்துறை!

கோவை: கோவையில் போலீசாருடன் இணைந்து போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கோவை  மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாநகர போக்குவரத்து போலீசார் உடன் இணைந்து போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபடும், டிராபிக் வார்டன் அமைப்பு லாப நோக்கம் இல்லாத தன்னார்வ அமைப்பாக செயல்பட்டு வருகிறது.

இதில் சேர்ந்து போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட தயாராக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு கோவையில் வசிப்பவராக இருக்க வேண்டும். 25ல் இருந்து, 45 வயதுக்குள் இருக்க வேண்டும், நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால் வயது வரம்பில் விலக்கு உண்டு. சேவை மனப்பான்மையோடு, மூன்று மணி நேரம் சேவை செய்ய இயன்றவராக இருத்தல் வேண்டும்.

மேலும், குற்றப் பின்னணி இல்லாதவராக இருத்தல் அவசியம். விண்ணப்பங்களை கோவை மாநகர போக்குவரத்து துணை கமிஷனர் அலுவலகம் மற்றும் டிராபிக் வார்டன் அலுவலகத்தில் வருகிற 6 மற்றும் 7ம் தேதிகளில் காலை, 10:00 மணி முதல் மாலை, 4:00 மணிக்குள் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe