துபாயில் அஜித்துக்கு சொத்து! ஷாலினி சேர்த்த சொத்துக்கள்!

published 10 months ago

துபாயில் அஜித்துக்கு சொத்து! ஷாலினி சேர்த்த சொத்துக்கள்!

நடிகர் அஜித் மனைவி ஷாலினி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது கேரியரை துவங்கினார்.
தமிழில் காதலுக்கு மரியாதை படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படம் நல்லா வரவேற்பை பெற்றது.

பின்னர் அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி அமர்களம் படத்தில் நடிக்கும் சமயத்தில் அஜித்துக்கும் ஷாலினிக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த 2000-ம் ஆண்டு அஜித் - ஷாலினி ஜோடிக்கு திருமணம் நடந்தது. 

திருமணத்துக்கு பின் பிரியாத வரம் வேண்டும் என்ற படத்தில் மட்டும் நடித்தார். அத்துடன் சினிமாவை விட்டே விலகினார் ஷாலினி.இவர்களுக்கு  அனோஸ்கா என்ற மகள் மற்றும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். சினமாவுக்கு முழுக்கு போட்ட ஷாலினி குடும்பம், குழந்தைகள் வளர்ப்பு என கவனம் செலுத்தி வருகிறார்.  ஷாலினிக்கு ஷாமிலி என்கிற தங்கையும், ரிச்சர்டு ரிஷி என்கிற தம்பியும் உள்ளனர். இவர்களும் சினிமாவில் நடித்துள்ளனர்.

தற்போது ஷாலினியின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித் மற்றும் ஷாலினி ஜோடி சென்னை மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வீடுகள் வாங்கி வைத்துள்ளனர். மேலும் துபாயில் இரண்டு  இடங்களில் சொகுசு வீடுகளும் இவர்களுக்கு  இருக்கிறது.

படங்களில் ஹீரோயினாக நடித்த சமயத்தில் ஷாலினி அப்போதே சுமார் 50 லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார்.  தற்போது சினிமாவில் இல்லாத போதும் ஷாலினியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 300 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.  இதுதவிர பல்வேறு சொகுசு கார்களும் ஷாலினியிடம் உள்ளதாம். தமிழ் சினிமாவில்  முன்னணி நடிகராக இருக்கும்   அஜித்துக்கும்  மிகப்பெரிய தொகையில்  சம்பளமாக கிடைத்து வருகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe