படம் ஓடலைன்னாலும் பரவாயில்லை.. சம்பளத்தை மளமளவென உயர்த்தும் நயன்!

published 10 months ago

படம் ஓடலைன்னாலும் பரவாயில்லை.. சம்பளத்தை மளமளவென உயர்த்தும் நயன்!

தென்னிந்திய சினிமாவில் பெரிய அளவில் கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா. இவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும் உண்டு. தற்போது இவரது புதிய படத்திற்கு வாங்கவிருக்கும் சம்பளம் பற்றிய   தகவல்கள்  வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

2005 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில்  ஐயா படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்து தற்போது முன்னணி முக்கிய நடிகர்களின் படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. மேலும் திரைப்படங்களில் ஹீரோயினாக மட்டுமில்லாமல் நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில்  ஹிந்தி படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

தான் நடிக்கும் திரைப்படங்களில் 5 கோடி முதல் சம்பளம் பெற்று வந்த இவர், தனது சம்பளத்தை படிப்படியாக உயர்த்தி 8-10 கோடிகளை சம்பளமாக பெற்றுள்ளார்.

சமீபத்தில் நயன்தாரா நடித்திருந்த நெற்றிக்கண், அன்னபூரணி, O2 ஆகிய பல படங்கள் நஷ்டம் அடைந்தது.
மேலும் அன்னபூரணி திரைப்படம்,  பிளாப் படமாக மாறினாலும், சில சர்ச்சையான வசனங்களால் இப்படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில்  நீக்கப்பட்டது. இதனால் நயன்தாராவின் திரைப்பயணம் பெரிய அளவில் சரிவை கண்டது.

இந்த நிலையில் வெள்ளித்திரையில் புதுமுக  இயக்குனராக அறிமுகமாகும் செந்தில் இயக்கத்தில் டிரம்ஸ்ஸ்டிக் புரொடக்சன் நிறுவனம் தயாரிப்பில் நடிகை நயன்தாரா புதிய படத்தில் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த படத்தில்  நடிகை நயன்தாரா 12 கோடி  சம்பளமாக கேட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏன் என்றால் சமீப காலமாக எந்த படமும் ஓடாத நிலையில், நயன்தாரா இத்தனை கோடி சம்பளத்தை உயர்த்தி இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe