முக்கிய அறிவிப்பு: கோவை-சென்னை ரயில், சென்ட்ரல் ரயில் நிலையம் வரை செல்லாது!

published 10 months ago

முக்கிய அறிவிப்பு: கோவை-சென்னை ரயில், சென்ட்ரல் ரயில் நிலையம் வரை செல்லாது!

கோவை: கோவையில் இருந்து சென்னை செல்லும் ரயில் இன்று சென்னை சென்ட்ரல் வரை செல்லாது என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே இன்று மதியம் 3:15 மணிக்கு கோவை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் கோவை எக்ஸ்பிரஸ் ( வண்டி எண் 1 2 6 7 6 ) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரை செல்லாது.

மாறாக அந்த ரயில் எக்மோர் வரை மட்டுமே செல்லும், இன்று ஒரு நாள் இந்த ரயில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.

சென்னை சென்ட்ரலில் பொறியியல் பணி நடைபெறுவதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சென்னை வரும் ரயில்களில் இது போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கலாம், 

இந்த அறிவிப்பு தற்போது தான் அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே இன்று ரயிலில் பயணிப்போருக்கு இந்த செய்தியை கொண்டு சேர்க்கவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe