கோவை - மேட்டுப்பாளையம் மெமு ரயில் ரத்து

published 10 months ago

கோவை - மேட்டுப்பாளையம் மெமு ரயில் ரத்து

கோவை: கோவை மேட்டுப்பாளையம் இடையே தினமும் 5 முறை மெமு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் இருப்புப்பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று கோவை - மேட்டுப்பாளையம் இடையே கோவை இருந்து மேட்டுப்பாளையத்திற்கு
காலை 11.50 மணிக்கு இயக்கப்படும் ரயிலும், மேட்டுப்பாளையம் - கோவை இடையே காலை 10.55 மணிக்கு இயக்கப்படும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.

அதே போல் வரும் 6ம் தேதி
கோவை - மேட்டுப்பாளையம் இடையே மாலை 5.55 மணிக்கு இயக்கப்படும் ரயிலும், மேட்டுப்பாளையம் - கோவை இடையே மாலை 4.45 மணிக்கு இயக்கப்படும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.

மேலும் 8 , 11 ,13ம் தேதிகளில்
கோவை - மேட்டுப்பாளையம் இடையே மதியம் 3.45 மணி,
மேட்டுப்பாளையம் - கோவை இடையே மதியம் 12.55 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

அதே போல் வரும் 14 , 16 , 20 , 22 , 24ம் தேதிகளில் கோவை - மேட்டுப்பாளையம்  இடையே காலை 11.50 மணி,
மேட்டுப்பாளையம் - கோவை  இடையே காலை 10.55 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
---

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe