தேசிய அளவில் நடைபெற்ற குதிரையேற்ற போட்டிகள்- பதக்கங்களை வென்ற கோவை மாணவர்கள்..

published 10 months ago

தேசிய அளவில் நடைபெற்ற குதிரையேற்ற போட்டிகள்- பதக்கங்களை வென்ற கோவை மாணவர்கள்..

கோவை: புதுச்சேரியில் நடைபெற்ற குதிரையேற்ற போட்டியில் கோவை மாணவர்கள் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றுள்ளனர். மேலும் குதிரைறே்ற வீரர்களில் ஒரு மாணவி ஜூனியர் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தேர்வாகி உள்ளார்.

 

இது குறித்த 
செய்தியாளர்கள்  சந்திப்பு நவ இந்தியா பகுதியில் செயல்படும் ஈகுவைன் டிரீம்ஸ் குதிரையேற்ற பயிற்சி மையத்தில் நடைபெற்றது.

அப்போது
தேசிய அளவிலான குதிரைறே்ற போட்டிகள் குறித்து ஈகுவைன் டிரீம்ஸ் தலைமை செயல் அதிகாரி சக்தி பாலாஜி கூறியதாவது: தேசிய அளவிலான குதிரைறே்ற போட்டி புதுச்சேரியில் மார்ச் இறுதியில் நடந்தது.

இப்போட்டியில் நவ இந்தியா பகுதியில் செயல்படும் ஈகுவைன் டிரீம்ஸ் குதிரையேற்ற பயிற்சி மையத்தில் பயற்சி மேற்கொள்ளும் 10 வீரர் வீராங்கனையினர் பங்கேற்று வெவ்வேறு பிரிவுகளில் போட்டியிட்டனர்.

இதில், 60செ.மீ., 70செ.மீ., 80செ.மீ., ஷோ ஜம்பிங் பிரிவுகளில் ஹாசினி, அர்ஜூன், நிதின், தயா, மனோஜ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை வென்றனர்.

 

"டிரஸ்ஸேஜில்' பிரிவில் நர்தன்யா, அதிதேவ், அச்சலா ஆகியோரும் தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.

சென்னை மற்றும் புதுச்சேரியில் நடந்த மாநில மற்றும் தேசிய அளவிலான குதிரையேற்ற போட்டிகளில் தங்களது மாணவர்கள் பல்வேறு பரிசுகளை வென்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதுடன் புதிய  உத்வேகத்தை  மாணவர்கள் மத்தியில் கொடுத்துள்ளது என்றார்.

மேலும் மாணவி ஹாசினி ஜூனியர் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தேர்வாகி உள்ளது பயிற்சி மையத்திற்கு பெருமை சேர்த்துக் உள்ளதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe