கோவையில் ஸ்டாலினை வைத்தே படம் காட்டிய எடப்பாடி பழனிசாமி!

published 10 months ago

கோவையில் ஸ்டாலினை வைத்தே படம் காட்டிய எடப்பாடி பழனிசாமி!

கோவை: முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசும் வீடியோவை கோவை அ.தி.மு.க., பொதுக்கூட்ட மேடையில் போட்டுக்காட்டி பிரசாரம் செய்தார் 
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

கோவை கொடிசியா மைதானத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் அக்கட்சியின் கோவை தொகுதி வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரத்து பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.

மேடையில் அவர் பேசியதாவது:

தமிழகத்திற்கு எண்ணற்ற திட்டத்தை அ.தி.மு.க., கொண்டுவந்தது. அந்த திட்டங்களில் ஸ்டிக்கர் ஒட்டி தற்போது தி.மு.க., அரசு திறந்து வைக்கிறது.

ஸ்டாலினுக்கு தில், திராணி, தெம்பு இருந்தால் ஒரே மேடையில் என்னை சந்திக்கலாம்;
. உங்கள் ஆட்சியில் கொண்டுவந்த திட்டத்தை நீங்கள் பேசுங்கள், எங்கள் ஆட்சியில் கொண்டு வந்த திட்டத்தை நான் பேசுகிறேன். எந்த இடத்தில் என்றாலும் சரி, வரத் தயார்.

நாங்கள் பா.ஜ., கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டோம். பிறகு உங்களுக்கு ஏன் எரிகிறது? நீங்கள் மோடியை எதிர்க்கிறீர்கள் தானே? பிறகு ஏன் அவரை தமிழகத்திற்கு அழைத்து வந்து சரணாகதி அடைகிறீர்கள்.

வெள்ளைக் குடை பிடித்த பொம்மை வேந்தர் என ஸ்டாலினுக்கு பட்டம் கொடுத்தால் சரியாக இருக்கும். கச்சத்தீவை இந்தியாவோடு இணைக்க வேண்டும் என தொடந்து குரல் கொடுக்கும் ஒரே கட்சி அ.தி.மு.க.; அதற்கு எங்களுக்குத் தான் தகுதி உள்ளது.

தி.மு.க., அரசு ஒரு திட்டத்தை அறிவிப்பார்கள், அதற்கு ஒரு குழுவை ஆரம்பிப்பார்கள்,  அத்துடன் அந்த திட்டம் முடிந்துவிடும். 
வீட்டு வரி, கடை வரி, குப்பை வரி, அனைத்து வரிகளையும் உயர்த்தியது தி.மு.க., அரசு.

மின் கட்டணத்தை உயர்த்து தொழிலை அழித்து வருகிறது தி.மு.க., அரசு. 
கோவை மாநகராட்சியில் 500 சாலைகளை சீரமைக்க அ.தி.மு.க., ஆட்சியில் டெண்டர் விடப்பட்டது. தி.மு.க., அரசு வந்ததும் அதனை ரத்து செய்தது.

ஏழை மக்களுக்கு கொடுக்கும் பொங்கல் தொகுப்பில் கூட ஊழல் செய்துள்ளனர்.

தேர்தல் பத்திரம் மூலம் பல கோடியை வாங்கிவிட்டு, உத்தமனைப்போல் நடிக்கிறார். சிவாஜிகணேசன் உயிரோடு இருந்திருந்தால் உங்கள் நடிப்பை பார்த்து மயங்கி விழுந்துவிடுவார். செந்தில் பாலாஜி நல்லவேளையாக சிறை சென்றுவிட்டார். இல்லையென்றால் கோவையே போண்டி ஆயிருக்கும்.

என்று பேசினார்.

இதனிடையே செந்தில் பாலாஜியை விமர்சித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசிய வீடியோ கூட்டத்தில் ஒளிபரப்பப்பட்டது. அதில், "ஊழலுக்கு பெயர்போனவர் செந்தில் பாலாஜி" என்று ஸ்டாலின் பேசுகிறார்.

மற்றொரு வீடியோவில் செந்தில்பாலாஜி, "கருணாநிதி குடும்பத்தாரை பொருத்தவரை அவர்களுக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி" என்கிறார்.

இந்த இரண்டு வீடியோவையும் போட்டுக்காட்டி பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார் எடப்பாடி பழனிசாமி.

இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அ.திமு.க., எம்.எல்.ஏ., க்கள் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe