கோவையில் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்து வாக்களிக்கும் தேதிகள் அறிவிப்பு...

published 10 months ago

கோவையில் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்து வாக்களிக்கும் தேதிகள் அறிவிப்பு...

கோவை: கோவையில் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்து வாக்களிக்கும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

2024 பாராளுமன்ற தேர்தலில் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களது விருப்பத்தின் பேரில், இல்லத்திற்கே சென்று வாக்குகளை சேகரிக்க இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

இதன்படி ஏற்கனவே படிவம் 12டி-ல் விண்ணப்பம் செய்த 20 கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் 2570 மூத்த குடிமக்கள் வாக்காளர்களும், 424 மாற்றுத் திறனாளி வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர்.இதே போன்று பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் 2085 மூத்த குடிமக்களும் மற்றும் 567 மாற்றுத் திறனாளிகளும் வாக்களிக்க உள்ளனர். ஏற்கனவே படிவம் 12டி-ல் விண்ணப்பிக்காதவர்கள் தபால் வாக்களிக்க இயலாது. மேற்படி வாக்காளர்களிடம் வாக்குகளை சேகரிக்க Poll Officer தலைமையின் கீழ் Micro Observer அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி 20 கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்கு 15 குழுக்களும், சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கு 10 குழுக்களும், கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு 15 குழுக்களும், கோவை (வடக்கு) சட்டமன்றத் தொகுதிக்கு 10 குழுக்களும், கோவை (தெற்கு) சட்டமன்றத் தொகுதிக்கு 10 குழுக்களும், சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு 10 குழுக்களும் என மொத்தம் 70 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதே போல் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிக்கு 10 குழுக்களும் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக்கு 14 குழுக்களும், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்கு 10 குழுக்களும், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு 10 குழுக்களும், உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு 21 குழுக்களும், வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு 10 குழுக்களும் என மொத்தம் 75 குழுக்கள்
அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழுக்கள் 05.04.2024, 06.04.2024 மற்றும் 09.04.2024 ஆகிய தேதிகளில் மேற்படி வாக்காளர்களின் இல்லத்திற்கே சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர். இந்த வசதியினை பயன்படுத்தி ஏற்கனவே விருப்பம் தெரிவித்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அவர்களது இல்லங்களில் இருந்தே வாக்கு செலுத்தலாம்.

படிவம் 12டி-ல் விண்ணப்பம் செய்த பிறகு வாக்குச் சாவடிக்கு நேரில் சென்று
வாக்களிக்க இயலாது. எனவே தபால் வாக்கிற்கு விண்ணப்பித்த மூத்த
குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மேற்குறிப்பிட்ட தினங்களில் வாக்களிக்க ஏதுவாக அவர்களது
வீட்டிலேயே இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe