திருமணத்திற்கு பின் முதல்முறையாக... அட்டை படத்திற்கு போஸ் கொடுத்த நயன் - விக்கி!

published 10 months ago

திருமணத்திற்கு பின் முதல்முறையாக... அட்டை படத்திற்கு போஸ் கொடுத்த நயன் - விக்கி!

நடிகை நயன்தாரா முதல் முறையாக, தன்னுடைய கணவருடன் சேர்ந்து, அட்டை படத்திற்கு போஸ் கொடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

40 வயதை நெருங்க உள்ள நடிகை நயன்தாரா, லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.  கடந்த ஆண்டு வெளியான 'ஜவான்' திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிலும் தலை காட்டியுள்ளார்.

அட்லீ இயக்கத்தில் இவர் நடித்த முதல் பாலிவுட் திரைப்படமே, சுமார் 1200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.  அடுத்து சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் புதிய படத்தில் நயன்தாரா கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது, அதற்காக பெரிய தொகை நடிகை தரப்பில் கேட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

நடிகை நயன்தாரா தனது சொந்த தொழில், விளம்பரங்கள், போட்டோ ஷுட்கள் எனவும் பணியாற்றி வருகிறார். கணவர் விக்னேஷ் சிவனுடன்  சேர்ந்து  பல்வேறு தொழில் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.   கணவர், குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வைரலாகி வருகின்றன.

தற்போது நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட பின்னர், முதல் முறையாக கணவருடன் சேர்ந்து கவர்ச்சி உடையில் நயன்தாரா மேகசீன் அட்டை படத்திற்காக எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. திருமணத்திற்கு பின்னர் இருவரும் இணைந்து முதல் முறையாக மேகசீனுக்கு போஸ் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

'ஹலோ' என்ற மேகசீனின் அட்டை படத்திற்கு போஸ் கொடுத்துள்ள நயன்தாரா, வெள்ளை நிற அல்ட்ரா மாடர்ன் உடையும்,  விக்னேஷ் சிவன் கருப்பு நிற கோட் சூட் அணிந்தும் போஸ் கொடுத்துள்ளனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe