திமுக-அதிமுக இடையே கள்ளக்கூட்டணி இருக்காம்! கோவையில் டிடிவி.தினகரன் அடடே பேச்சு!

published 10 months ago

திமுக-அதிமுக இடையே கள்ளக்கூட்டணி இருக்காம்! கோவையில் டிடிவி.தினகரன் அடடே பேச்சு!

கோவை: எடப்பாடி பழனிச்சாமி திமுகவிற்கு மறைமுகமாக உதவி செய்து வருகிறார் என டிடிவி.தினகரன் கோவையில் பிரசாரம் மேற்கொண்டார்.

 

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினர், கூட்டணி கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையிலும் பிரசாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் தொடர்சியாக
கோவை ராமநாதபுரம் 80 அடி சாலையில் பாஜக வேட்பாளரான அண்ணாமலையை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய டிடிவி தினகரன்

மூன்றாவது முறையாக பிரதமர் மோடி வந்தால் தான் நாட்டிற்கு பாதுகாப்பாக இருக்கும். தமிழ்நாட்டில் தற்பொழுது ஆட்சி செய்கிறது தீய சக்தி. திமுக.,வை வீழ்த்த வேண்டும்.

தமிழ்நாட்டில் மாபெரும் கூட்டணி அமைந்துள்ளது. பல்வேறு கூட்டணி கட்சிகள் அமைப்புகள்  தேசிய ஜனநாயகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன.

நாங்கள் தான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உண்மையான கட்சி என்று கூறும் சேலத்து சிங்கம் எடப்பாடி பழனிச்சாமி ஏன் போட்டியிடவில்லை

முதல்வர் ஸ்டாலினோ எடப்பாடி பழனிச்சாமியும் யார் பிரதமர் வேட்பாளர் என்று சொல்ல முடியுமா? எடப்பாடி பழனிச்சாமி இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு பயம்.

தங்கள் மீது வழக்கு எதுவும் வந்துவிடக்கூடாது என்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி தி.மு.க.,விற்கு மறைமுகமாக உதவி செய்து வருகிறார். திமுக., அதிமுக., இடையே கள்ளக்கூட்டணி உள்ளது.

திமுக.,வினர் மக்களை ஏமாற்றி ஆட்சி அமைந்து விட்டார்கள் விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், மருத்துவர்கள் செவிலியர்கள் என அனைத்து துறையும் இந்த ஆட்சி ஏமாற்றி வருகிறது.

பிரதமர் மோடிக்கு இணையான வேட்பாளர் எந்த கூட்டணியிலும் இல்லை. கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலையை வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe