சேலையில் க்யூட் போஸ் கொடுக்கும் ஸ்ருதிஹாசன்..!

published 10 months ago

சேலையில் க்யூட் போஸ் கொடுக்கும்  ஸ்ருதிஹாசன்..!

நடிகர் கமல்ஹாசனின்  மூத்த மகள் தான் பிரபல நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன். கமல்ஹாசன் நடிப்பில் வெளியான "ஹே ராம்"  திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக இவர் அறிமுகமானார். பாடகியாக தனது கேரியரை ஆரம்பித்த அவர்,  கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்தில் முதல்முதலாக பாடகியாக அறிமுகமானார்.

பின்னர் தமிழில் கடந்த 2011 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன்  உருவெடுத்தார்.

ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக நடித்து வரும் ஸ்ருதிஹாசன், கடந்த 2023 ஆம் ஆண்டு "The Eye" என்ற  ஆங்கில படத்திலும் நடித்திருந்தார்.

ஸ்ருதிஹாசன், அண்மையில் தான் இயக்கிய "இனிமேல்" என்ற இசை ஆல்பத்தில், பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து நடித்திருந்தார்.

இந்த நிலையில் ஸ்ருதி சேலையில் எடுத்த தனது அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe