கோவை சேரன் மாநகர் பகுதியில் உள்ள உணவகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...

published 10 months ago

கோவை சேரன் மாநகர் பகுதியில் உள்ள உணவகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...

கோவை: கோவை சேரன் மாநகரில் உள்ள ஒரு உணவகம் அருகே பெட்டிக்கடை ஒன்று உள்ளது. நேற்று மாலை சில வாலிபர்கள் பெட்டிக்கடைக்கு வந்து சிகரெட் கேட்டு அதற்கான பணத்தை கேட்டபோது கடைக்காரரிடம் தகராறு செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து சென்ற வாலிபர்கள்  இரவு சுமார் 9:30 மணிக்கு மீண்டும் அந்த பெட்டிக்கடைக்கு வந்து பெட்ரோல் குண்டுவீசி உள்ளனர். 

ஆனால் அந்த பெட்ரோல் குண்டு எதிர்பாராமல் அருகே இருந்த ஹோட்டல் அருகில் விழுந்து வெடித்துள்ளது.  இதனால் அப்பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.  

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு  வினோபாஜி நகரை சேர்ந்த வரதராஜன்(வயது25) என்பவரை பிடித்தனர். குடிபோதையில் இருந்த அவர், சிகரெட் கேட்டு தகராறு செய்து விட்டு தனது நண்பர்களுடன்  வந்து பெட்ரோல் குண்டு வீசி சென்று இருப்பது தெரியவந்துள்ளது.


 

இதில் உணவகத்திலும் லேசான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் குண்டு வீசிய வரதராஜனை பிடித்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசராணை நடத்தி வருகின்றனர். அவருடன் வந்த மற்ற 2 வாலிபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe