புதிய உச்சத்தில் தங்கம் விலை! - முழு விவரம்!

published 3 weeks ago

புதிய உச்சத்தில் தங்கம் விலை! - முழு விவரம்!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/J30Hw99ftHR2wHiYb8sllV

தங்கம் விலை இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.


தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே அதிகரித்து வந்தது. குறிப்பாக மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை விறுவிறுவென அதிகரிக்கத் தொடங்கியது.

தேர்தலுக்கு முன் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் விலை தாறுமாறாக அதிகரித்து வருகிறது.


கடந்த மாதம் 28ம் தேதி தங்கம் வரலாற்றில் முதன் முறையாக ரூ.50,000க்கு விற்பனை செய்யப்பட்டது. அப்போது முதல் தினந்தோறும் புதிய வரலாறு படைத்து வருகிறது.

இதனிடையே இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது.


தமிழகத்தில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35ம், பவுனுக்கு ரூ.280ம் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.6,705க்கும் ஒரு பவுன் ரூ.53,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.28ம் பவுனுக்கு ரூ.224ம் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.5,492க்கும் ஒரு பவுன் ரூ.43,936க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.89க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.89,000 க்கும் விற்பனையாகிறது.


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw