செடிகளுக்கும் வலிக்கும்! சிம்பு கூறியதை உண்மையாக்கிய இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள்!

published 9 months ago

செடிகளுக்கும் வலிக்கும்! சிம்பு கூறியதை உண்மையாக்கிய இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள்!

அறிவியல் பேசும் விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் சைவ உணவு ஆதரவாளர்கள், தாவரங்களை உண்ணலாம் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றனர்.

இப்போது விஞ்ஞானம் வேறுவிதமாக சொல்கிறது; இனி செடிகளை உண்பது கூடாது என்பதை 'விதண்டாவாதம்' என யாரும் சொல்ல முடியாது. அது ஏன்? இந்த தொகுப்பில் பார்க்கலாம்…

தாவரங்களுக்கு வலி ஏற்பிகள் இல்லை என்றும், எனவே அவற்றை வெட்டினால் அவற்றிற்கு வலி ஏற்படாது என்பதால் அதை வெட்டி உண்பதில் எந்த குற்றமும் இல்லை எனவும், அவற்றை நாம் உண்ணலாம் எனவும் நாம் நம்பினோம்.

ஆனால் இப்போது ஆராய்ச்சியாளர்கள் "தாவரங்களுக்கும் வலி ஏற்படுகிறது. செடிகளும் அழுகின்றன" என்று நிரூபித்துள்ளனர். இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தாவர உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளும் முயற்சியில், தாவரங்களால் ஏற்படும் ஒலிகளின் அதிர்வெண்களை பதிவுசெய்யும் ரெக்கார்டர்களைப் பயன்படுத்தி தாவரங்களிலிருந்து வெளிவரும் ஒலிகளையும் குரல்களையும்  பதிவு செய்ய முயன்றுள்ளனர்.

இந்த முயற்சியின் விளைவாக, அச்சமூட்டும் வகையில் மன அழுத்தத்தில் இருக்கும் தாவரங்களின் அலறல் மற்றும் அழுகைச் சத்தங்களை பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் பரிணாம உயிரியலாளர் லிலாச் ஹடானி கூறுகையில், "எல்லா உயிரினங்களும் மற்ற உயிரினங்களுடன் தொடர்பு கொள்ள ஒலி அலைகளைப் பயன்படுத்துகின்றன.

மனிதர்களின் கேட்கும் எல்லைக்கு வெளியே இந்த ஒலிகள் இருப்பதனால் அவற்றை நம்மால் கேட்க முடியாது. மனிதர்களுக்கு கேட்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக நாம் இந்த ஒலிகளை முற்றிலுமாக நிராகரிக்க முடியாது.

அவை கீழ் உயிரினங்களுக்குள் தொடர்பு கொள்ள பயன்படுத்தப்படுகின்றன. சில நேரங்களில் தாவரங்கள் மற்ற தாவரங்களுடனும் பூச்சிகளுடனும் தொடர்பு கொள்ள சில வித்தியாசமான மணங்கள் அல்லது நாற்றங்களையும் வெளியிடுகின்றன.

இவற்றைப் புரிந்து கொள்வதன் மூலம் தாவரங்களின் உணர்வுகளை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

இந்தச் சோதனையின் போது, தாவரங்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒரு குழு நன்கு பராமரிக்கப்பட்டும், மற்றொரு குழு நீரிழப்பு அல்லது அவற்றின் தண்டுகளை வெட்டுவதன் மூலமும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டன.

இந்த ஆய்விற்கு தக்காளி மற்றும் புகையிலை தாவரங்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும் இந்த தாவரங்களிலிருந்து பதிவு செய்யப்பட்ட ஒலிகள் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய 'அல்காரிதம்' எனச் சொல்லப்படும் கணினி நிரல்களைப் பயன்படுத்தி புரிந்துகொள்ளப்பட்டன.

அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில், மன அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்ட தாவரங்கள் மனிதர்கள் கண்டறியும் அளவிற்கு அப்பாற்பட்ட உயர்ந்த அதிர்வெண்களைக் கொண்ட ஒலிகளை உருவாக்கின.

அவை சுமார் ஒரு மீட்டர் சுற்றளவிற்கு கேட்கும் அளவிற்கு வலுவாக இருந்தது. அதேசமயம் நன்கு பராமரிக்கப்பட்ட, அழுத்தமில்லாத தாவரங்கள் எந்த ஒலியையும் ஏற்படுத்தாமல், அமைதியாக தங்கள் செயல்முறைகளை திறம்படச் செய்துவந்தன." என்றார்.

இதன் மூலம் தாவரங்களுக்கும் உணர்ச்சிகள் உள்ளன எனவும் அவற்றுக்கும் வலி ஏற்படுகிறது என முடிவு செய்த ஆராய்ச்சியாளர்கள் செடிகள் எவ்வாறு இந்த சத்தங்களை எழுப்புகின்றன என நாம் மேலும் ஆராய வேண்டும் என கூறியுள்ளனர்.

நடிகர் சிலம்பரசன் ஒரு பேட்டியில் தாவரங்களும் ஒரு உயிரினம் தான் அதனை வெட்டி உண்பதும் தவறு தான் என்று பேசியிருந்தார். அந்த வீடியோ சமீப காலமாக சமூக வலைதளங்களில் பயங்கரமாக 'ட்ரோல்' செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe