கோவையில் ஆண்களுக்கான தழும்பில்லாத குடும்பநல அறுவை சிகிச்சை முகாம்- தேதி விவரங்கள் இதோ...

published 2 hours ago

கோவையில் ஆண்களுக்கான தழும்பில்லாத குடும்பநல அறுவை சிகிச்சை முகாம்- தேதி விவரங்கள் இதோ...

கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்தில் 24.01.2025 வெள்ளிக்கிழமை அன்று காந்திபுரம் லஷ்மி காம்ப்ளக்ஸ் அருகில் உள்ள CTM Home -8 ஆம் நெம்பர் ஆஸ்பத்திரியில் ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்பநல அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் (NSV) நடைபெற உள்ளது. 

இச்சிகிச்சை 5 நிமிடத்தில் பயற்சி பெற்ற சிறந்த மருத்துவ நிபுணர்களை கொண்டு இலவசமாக செய்யப்பட உள்ளது. கத்தியின்றி இரத்தமின்றி எந்தவித பக்கவிளைவுகளுமின்றி செய்யப்படும் இச்சிகிச்சையினை, ஏற்றுகொள்ளும் ஆண்களுக்கு அரசு ஊக்கதொகையாக ரூ.1,100 மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி வழங்கும் ஊக்கத்தொகை ரூ.1,000 -ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் ஊக்கதொகையாக ரூ.1000 மொத்தம் என ரூ.3,100- வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இச்சிகிச்சையினை ஏற்பதால் இல்லற வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கோ, கடின உழைப்பிற்க்கோ தடையேதுமில்லை. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறவேண்டிய அவசியமில்லை. பக்கவிளைவுகள் இல்லாத இச்சிகிச்சை முறையாகும் என மாவட்ட குடும்ப அலுவலர் தெரிவித்துள்ளார்.

இச்சிகிச்சைமுறை பற்றிய ஏதேனும் சந்தேக விவரங்களுக்கு அலைபேசி 8072865541 ஆகியவற்றினை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe