எங்கள் நாட்டில் முதலீடு செய்யுங்கள்- கோவையில் இலங்கை இணை அமைச்சர் பேட்டி...

published 5 hours ago

எங்கள் நாட்டில் முதலீடு செய்யுங்கள்- கோவையில் இலங்கை இணை அமைச்சர் பேட்டி...

கோவை: அயலவர் தமிழர் மாநாட்டிற்காக வருகை புரிந்துள்ள இலங்கை வேளாண்மை மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இணையமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், கோவை வடவள்ளி பகுதியில் உள்ள பப்புவா நியு கினியின் ட்ரேட் கமிஷ்னர் விஷ்ணுவை சந்தித்தார்.

இது பற்றி கூறிய சுந்தரலிங்கம் பிரதீப், தமிழ்நாடு அரசு மேற்கொள்ளப்பட்டுள்ள அயலவர் தமிழர் மாநாட்டிற்காக வருகை புரிந்துள்ளதாக தெரிவித்தார். அங்கு பல்வேறு நாடுகளின் அரசியல்வாதிகள் இலக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர் எனவும் இது மிகவும் சிநேகப்பூர்வமான ஒன்றாக அமைந்ததாக தெரிவித்தார்.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் உள்ள நட்பு என்பது வரலாறு தொட்டே இருந்து கொண்டிருப்பதாகவும் தொப்புள்கொடி உறவு எனவும் குறிப்பிட்டார். இந்தியாவையும் இலங்கையையும் 32 கிலோ மீட்டர் மட்டும்தான் கடல் பிரிப்பதாகவும் இருப்பினும் எங்களுக்குள் அன்பு உண்டு என தெரிவித்தார். இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியாவின் பங்கு இன்றியமையாததாக இருப்பதாகவும், இந்திய அரசு இலங்கையில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி தரும் திட்டத்தை அறிவித்துள்ளதாக கூறிய அவர் இந்தியாவிற்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

மீனவர் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி சமூகமான தீர்வு காண்பதற்கு முயற்சி செய்வதாக தெரிவித்தார். மேலும் இங்குள்ள நிறுவனத்தினர் எங்கள் நாட்டில் முதலீடு செய்யுங்கள் என கேட்டுக்கொண்ட அவர் எங்கள் நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கு முன் வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்ததாகவும் அப்பொழுது இலங்கைக்கு அவரது அமைச்சரகம் சார்பில் கல்வி மற்றும் விளையாட்டு உதவிகள் குறித்து கேட்டுள்ளதாகவும் அதற்கான உதவிகளை அவர் தருவதாக தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe