கோவையில் ஒரே இடத்தில் 1,500 பேர் சிலம்பம் சுழற்றி கின்னஸ் சாதனை...

published 1 week ago

கோவையில் ஒரே இடத்தில் 1,500 பேர் சிலம்பம் சுழற்றி கின்னஸ் சாதனை...

கோவை: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை, உலகம் முழுவதும் கொண்டு செல்லும் வகையில்  பல்வேறு வகைகளில் சிலம்பம் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக  கோவை பேரூர் அடுத்த தீத்திபாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில், கராத்தே அமைப்பு இணைந்து நடத்திய  சிலம்பம் மற்றும் கராத்தே சாதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்ச்சியில்,  4 வயது சிறுவர்கள் முதல் 50 வயது நபர்கள் வரை என சுமார் 1,500 பேர் ஒரே நேரத்தில் சிலம்பம் சுற்றியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

45 நிமிடங்கள் ஒரே இடத்தில் பாரம்பரிய உடை அணிந்து 1,500 பேர் சிலம்பம் சுற்றியது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளது.

மேலும் இந்த உலக சாதனை போட்டிக்காக தமிழ்நாட்டில் இருந்து  சென்னை, கோவை, கன்னியாகுமரி, உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான  கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்த சிலம்பக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் சிலம்பம் சுற்றி இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளனர்.

உலகில் வேறு எந்த பகுதியிலும் இந்த சாதனை நிகழ்த்தியதில்லை  என்பதால், இது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe