அஜித் ரசிகர்களுக்கு குட் நியூஸ்... விடாமுயற்சிக்கு தேதி குறிச்சாச்சு!

published 10 months ago

அஜித் ரசிகர்களுக்கு குட் நியூஸ்... விடாமுயற்சிக்கு தேதி குறிச்சாச்சு!

மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படம்  ரசிகர்களின் மத்தியில் வெறித்தனமான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. மேலும்   அஜித்தின் 62 - வது ஆக்ஷன் படமாக இது உருவாகி வருகிறது.

இப்படத்தில் 'மங்காத்தா' காம்போவான அஜித், அர்ஜுன், திரிஷா ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். அத்துடன் பிக்பாஸ் ஆரவ், ரெஜினா காசண்ட்ரா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

விடாமுயற்சி திரைப்படத்தின்  படப்பிடிப்பு  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது.  தொடர்ந்து  வடமாநிலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

கடந்த 14ம் தேதி படத்தின் 'பர்ஸ்ட் லுக்'   வெளியிடப்பட்டது. இந்த படத்தில் சண்டை காட்சியில் 'டூப்' இல்லாமல் அஜித் துணிச்சலாக நடித்து அசத்தி உள்ளார்.

சமீபத்தில் இணைய தளத்தில் நடிகர் அஜித்தின் துணிச்சலான கார் 'ஸ்டண்ட்' வீடியோ காட்சி   வைரலாக பரவியதை அடுத்து  அஜித்தின் அர்ப்பணிப்பு மிக்க நடிப்பை ரசிகர்கள் பாராட்டினர். இதன் காரணமாக படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகி உள்ளது.

தற்போது  விடாமுயற்சி திரைப்படம் வரும்  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1ம்  தேதி வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe