மலையாளத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய க்ரைம் த்ரில்லர் படங்கள்.. மிஸ் பண்ணிராதீங்க!

published 10 months ago

மலையாளத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய க்ரைம் த்ரில்லர் படங்கள்.. மிஸ் பண்ணிராதீங்க!

மலையாளத்தில் வெளியாகும் திரைபடங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல  வரவேற்பு உள்ளது.  அதிலும் மலையாளத்தில் எடுக்கப்படும் க்ரைம் த்ரில்லர் படங்கள் அனைத்தும் சுவாரஸ்யமாக இருக்கின்றன. 
அந்த வகையில் மலையாளத்தில் வெளியான கட்டாயம் பார்க்க வேண்டிய திரில்லர் படங்களின் லிஸ்ட் உங்களுக்காக:

மெமரிஸ் (Memories)

கடந்த 2013ம் ஆண்டு மலையாளத் திரையுலகில் மெமரிஸ் படம் வெளியானது. இதில் நடிகர் பிருத்விராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேகனா ராஜ், மியா ஜார்ஜ், சுரேஷ் கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.   இந்த படத்தை  ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.

த்ரிஷ்யம் (Drishyam)  

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான த்ரிஷ்யம் படத்தில் மோகன்லால், மீனா, அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில், கலாபவன் ஷாஜோன், ஆஷா சரத் ஆகியோர் நடித்துள்ளனர். சிறந்த க்ரைம் த்ரில்லர் படங்களில் இதுவும் ஒன்று. இந்த படத்தை  ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம். இப்படத்தின் தொடர்ச்சியாக த்ரிஷ்யம் 2 படமும் உள்ளது.

ஜோசப் (Joseph)

2018 இல் மலையாளத்தில் வெளியான வித்தியாசமான க்ரைம் த்ரில்லர் திரைப்படங்களில் ஜோசப் ஒன்றாகும். ஜோசப் என்ற ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரியை சுற்றி படம் நகர்கிறது.  தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த படம்  அமேசான் பிரைமில் உள்ளது.

அஞ்சம் பத்திர (Anjaam Pathira)

கடந்த 2020ம் ஆண்டு வெளியான சூப்பரான ஒரு கிரைம் திரில்லர் படம் அஞ்சம் பத்திர. மலையாள சினிமாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய கிரைம் த்ரில்லராக படம் இது. படத்தில் குஞ்சாக்கோ போபன், ஷரஃப் யு தீன், ஸ்ரீநாத் பாசி, உன்னிமய பிரசாத், ஜினு ஜோசப் ஆகியோர் நடித்துள்ளனர்.   இப்படம் Sun NXT தளத்தில் உள்ளது.

எல வீழ பூஞ்சிரா (Ela Veezha Poonchira)

இந்த படம் 2022 இல் வெளியானது. மலை உச்சியில் உள்ள காவல்துறை அதிகாரியான மதுவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட க்ரைம் திரில்லர் திரைப்படம் தான் ஏலா வீழா பூஞ்சிரா.  இப்படம் அமேசான் பிரைமில் உள்ளது.

கண்ணூர் ஸ்குவாட் (Kannur Squad)

2023 இல் வெளியான கண்ணூர் ஸ்குவாட் படம் க்ரைம் திரில்லர் ரசிகர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.   இப்படத்தில் மம்முட்டி, ரோனி டேவிட் ராஜ், அஸீஸ் நெடுமங்காட், ஷபரீஷ் வர்மா, கிஷோர் ஆகியோர் நடித்துள்ளனர்.   இப்படம் ஹாட்ஸ்டாரில்  உள்ளது.  

தமிழர்களின் புத்தாண்டு குறித்து தமிழ் இலக்கியங்கள் கூறுவது என்ன?

அன்பேஷிப்பின் கண்டேதும் (Anweshippin Kandethum)

மலையாளத்தில் சமீபத்தில்  அன்பேஷிப்பின் கண்டேதும்  க்ரைம் த்ரில்லர் திரைப்படம்   வெளியானது.  டோவினோ தாமஸ், வினீத் தட்டில் டேவிட், பிரமோத் வெளியநாடு ஆகியோர் நடித்துள்ளனர்.   இப்படம் நெட்ஃபிலிக்ஸ்ஸில் உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe