கிடச்ச 'கேப்பில்' மீண்டும் விண்ணை முட்டிய தங்கம்!

published 2 weeks ago

கிடச்ச 'கேப்பில்' மீண்டும் விண்ணை முட்டிய தங்கம்!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/CFoSUzRjtqAEmBrOacEIKZ

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

தங்கம் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. முதன்முறையாக கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி ஒரு பவுன் தங்கம் தங்கம் ரூ.50,000க்கு விற்பனையானது.


வரலாற்றில் புதிய தடத்தை பதித்த தங்கம் விலை, அன்று தொடங்கி இன்று வரை விலை உயர்வில் புதிய வரலாறு படைத்து வருகிறது.

தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.200 குறைந்தது. இதனிடையே இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.


பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் தங்கம் விலையில் மாற்றம் ஏதும் இன்றி இருக்கும். ஆனால் ஞாயிற்றுக்கிழமை என்றும் பாராமல் இன்றும் தங்கத்தின் விலை எகிறியுள்ளது.

தமிழகத்தில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75ம், பவுனுக்கு ரூ.600ம் ஆதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.6,855க்கும் ஒரு பவுன் ரூ.54,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.61ம் பவுனுக்கு ரூ.488ம் விலை அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,615க்கும் ஒரு பவுன் ரூ.44,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.89க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.89,000 க்கும் விற்பனையாகிறது.
 





சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw