கோவையில் போலீசாருடன் அண்ணாமலை வாக்குவாதம்; சாலை மறியல்..! இரவு நேரத்தில் பொதுமக்கள் கடும் அவதி! VIDEO

published 10 months ago

கோவையில் போலீசாருடன் அண்ணாமலை வாக்குவாதம்; சாலை மறியல்..! இரவு நேரத்தில் பொதுமக்கள் கடும் அவதி! VIDEO

கோவை: விதிகளை மீறி பிரச்சாரம் செய்வதாக அண்ணாமலையின் பிரசார வாகனத்தை நிறுத்திய போலீசார் உடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு பா.ஜ.க., தொண்டர்களுடன் இணைந்து கோவையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியின் பா.ஜ.க., வேட்பாளராக அண்ணாமலை போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் தி.முக., அ.தி.மு.க., நா.த.க., மற்றும் பா.ஜ.க., நேரடியாக மோதுவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கோவை ஸ்டார் தொகுதியாக பார்க்கப்படுகிறது.

அண்ணாமலை தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பத்து மணிக்கு மேல் பிரசாரத்தில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. விதிகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டதாக அவர் மீதும் வழக்கும் பதியப்பட்டுள்ளது.

இதனிடைய நேற்று இரவு 10 மணிக்கு மேல் பிரசார வாகனத்தில் ஒண்டிப்புதூர் காமாட்சிபுரம் அருகே அண்ணாமலை சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை தடுத்த போலீசார் தேர்தல் விதிகளை மீறி பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது என்று தெரிவித்தனர்.

அதற்கு, "நான் பிரசாரத்தில் ஈடுபட வில்லையே பிரசார வாகனத்தில் கையை கூப்பியபடி அமர்ந்திருந்தேன் அது பிரசாரமா?" என்று கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும், பா.ஜ.க., தொண்டர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார். இதனால் இரவு நேரத்தில் அவ்வழியாக வீடுகளுக்குச் சென்ற பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடும் அவதி அடைந்தனர்.

தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க., உள்ளிட்ட வேட்பாளர்கள் குறித்த நேரத்தில் பிரசாரத்தை முடித்து விடுவதால் எந்த பிரச்சனையும் ஏற்படுவதில்லை எனவும் பா.ஜ.க., வேட்பாளர் விதிகளை மீறி பிரசாரம் செய்வதோடு அதனை நியாயப்படுத்தி வாக்குவாதமும் செய்வதால் இது போன்ற சூழல்கள் தவிர்க்க முடியாததாக உள்ளதாகவும் பறக்கும் படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்திக்கான வீடியோவை பார்க்க லிங்க்-ஐ க்ளீக் செய்யவும்: https://youtu.be/bj8SH-XJ9AQ

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe