கோவையில் அண்ணாமலை உட்பட300 பேர் மீது வழக்கு!

published 10 months ago

கோவையில் அண்ணாமலை உட்பட300 பேர் மீது வழக்கு!

கோவை: சிங்காநல்லூர், சூலூர் காவல் நிலையங்களில் அண்ணாமலை உட்பட பா.ஜ.க., தொண்டர்கள் 300 பேர் மீது தேர்தல் விதிகளை மீறியதாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம்,  சூலூரில், பிரசாரத்திற்கு சென்ற தமிழக பாஜக தலைவரும் கோவை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை நேற்றிரவு 10 மணிக்கு மேல் பிரசாரத்தில் ஈடுபட முயன்றார்.  எனவே அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

 

கோவை மாநகர போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில், அவரது பிரசார வாகனத்தை விட்டு இறங்கி வந்த அண்ணாமலை,  கோவை மாவட்ட எல்லை பகுதியில் தனது ஆதரவாளர்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார்.

இது தொடர்பாக மாநில துணை வணிக அலுவலர் சண்முகப்பிரியா தலைமையிலான  தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் பேரில், 143 மற்றும் 341 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் அண்ணாமலை உட்பட 300 நபர்கள் மீது சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதே போல் சிங்காநல்லூர் காவல் நிலையத்திலும் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe