கோவையில் மக்கள் உரிமையை பேணிகாக்க திமுக வேட்பாளருக்கு வாக்களியுங்கள்- ஜவாஹிருல்லா பிரச்சாரம்...

published 2 weeks ago

கோவையில் மக்கள் உரிமையை பேணிகாக்க திமுக வேட்பாளருக்கு வாக்களியுங்கள்- ஜவாஹிருல்லா பிரச்சாரம்...

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/CFoSUzRjtqAEmBrOacEIKZ

கோவை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து உக்கடம் ஜி.எம் நகர் பகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா  பிரச்சாரம் மேற்கொண்டார்.




 


அப்போது பேசிய அவர், கணபதி ராஜ்குமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றியத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருவதை குறிப்பிட்ட அவர் இந்த பாஜக ஆட்சியில் பல கொடும்பான்மைகள் மக்களுக்கு எதிராகவும் குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் நடைபெற்றதாக தெரிவித்தார். காஷ்மீரில் ஆசிபா சிறுமி கொல்லப்பட்டது பால் வியாபாரி கொல்லப்பட்டது ஜுனைத்கான் ரயிலில் கொல்லப்பட்டது இவற்றை எல்லாம் நம்மால் மறக்க முடியுமா? இந்த நிகழ்வுகள் எல்லாம் நடைபெறும் பொழுது அதனை எதிர்த்து கடுமையான அறிக்கைகளை வெளியிட்டவர் இந்தியா கூட்டணிக்கு தமிழ்நாடு தலைமை தாங்கக்கூடிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் என்றார். ஆனால் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி இந்த நிகழ்வுகளை எல்லாம் கண்டித்து ஒரு வார்த்தையாவது பேசியது உண்டா? என கேள்வி எழுப்பினார்.

பாஜகவுடன் உறவை துண்டித்து விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார் என தெரிவித்த அவர் அவர்களுக்கு மத்தியில் ஒரு கள்ளக்காதல் இருக்கின்றது என விமர்சித்தார். தேர்தல் வியூகத்தின் ஒரு பகுதியாக இந்த தேர்தலில் தனித்தனியாக நிற்கின்றார்கள் என்பதுதான் உண்மை என கூறிய அவர், எங்கேயாவது எடப்பாடி பழனிச்சாமி மோடி பிரதமர் ஆவதை நான் ஆதரிக்கவில்லை என எங்கேயாவது பேசி இருக்கிறாரா? என கேள்வி எழுப்பினார். எடப்பாடி பழனிச்சாமி
அண்ணாமலையையும் மற்ற பாஜக தலைவர்களையும் திட்டுவதை நான் மறுக்கவில்லை எனவும் ஆனால் மோடி பிரதமராக கூடாது எங்கள் பிரதமர் மோடி இல்லை என்று  பேசி இருக்கிறாரா? அவர் பேசவில்லை என்றார்.


இந்தியா கூட்டணியில் கோவைக்கு வந்த ராகுல் காந்தி பொதுக்கூட்டத்திற்கு செல்லும் வழியில் ஒரு ஸ்வீட் கடையை பார்த்ததும் காரை விட்டு இறங்கி சென்று இனிப்புகளை வாங்கி அதற்கான காசையும் கொடுத்துவிட்டு அந்த இனிப்புகளை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இடம் கொடுத்து  ஸ்டாலின் எனது மூத்த சகோதரர் என கூறுகிறார்  மு க ஸ்டாலினும் எனது அருமை சகோதரர் தம்பி ராகுல் என சொல்கிறார்  இந்த அளவு ஒரு ஒற்றுமை இந்தியா கூட்டணியில் இருக்கிறது என தெரிவித்தார்.

மேலும் யார் பிரதமராக வரக்கூடாது என்பதில் இந்தியா கூட்டணி மிகத் தெளிவாக உள்ளது என்றார். அதிமுகவிற்கு சிலர் கூஜா தூக்கி செல்கிறார்கள் என தெரிவித்த அவர் சிஏஏ சட்டத்தை  ஆதரித்து அதிமுகவினருக்கு சிலர் கூஜா தூக்கி செல்வதாக விமர்சித்தார். சிஏஏ சட்டத்தை ஆதரித்ததோடு மட்டும் அல்லாமல் தீர்மானத்தை நிறைவேற்ற மறுத்த அதிமுகவிற்கு கூஜா தூக்கிக் கொண்டு செல்கிறார்கள் என தெரிவித்தார்.


கோவை தொகுதியில் சமூக நல்லிணக்கமும் மதசார்பற்ற தன்மையும் அனைத்து மக்களின் உரிமைகளும் பேணிக்காக்கப்பட வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள் என தெரிவித்தார்.


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw