துடியலூர் பகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்த திமுகவை சேர்ந்தவரை பிடித்த பாஜகவினர்...

published 10 months ago

துடியலூர் பகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்த திமுகவை சேர்ந்தவரை பிடித்த பாஜகவினர்...

கோவை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு துடியலூர் சுப்பிரமணியம் பாளையத்திலுள்ள, 15வது வார்டு  பொது மக்களுக்கு தி.மு.க.,வினர் பணப்பட்டுவாடா செய்து கொண்டிருந்ததாக வந்த தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற பா.ஜ.க.,வினர், பணம் கொடுத்துக்கொண்டிருந்த ஒருவரைப் பிடித்தனர். 

பிடிபட்ட நபருடன் வந்த இரண்டு பேர் தப்பியோடிய நிலையில், பிடிபட்டவரிடம் பா.ஜ.க.,வினர் விசாரித்ததில் அவர் பெயர் மனோஜ் ( 23) எனவும், தி.மு.க.,வைச் சேர்ந்த சம்பத் ஓட்டுக்கு பணமளிக்க கூறியதால், பணம் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் பா.ஜ.க.,வினர் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், மனோஜை துடியலூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். 

இதில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக, கொடுக்க வைத்திருந்த 42, 500 ரூபாயை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, துடியலூர் காவல் துறையினர் சி.எஸ்.ஆர்., பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe