உஷார்... ரூ.55 ஆயிரத்தை நெருங்கியது தங்கம்! இன்றைய விலை நிலவரம்

published 2 weeks ago

உஷார்... ரூ.55 ஆயிரத்தை நெருங்கியது தங்கம்! இன்றைய விலை நிலவரம்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/J30Hw99ftHR2wHiYb8sllV

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

தங்கம் விலை இன்று அதிகரித்துள்ளது. ஒரு பவுன் ரூ.55,000ஐ நெருங்கியுள்ளது.


தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தங்கம் விலை தாறுமாறாக அதிகரிக்கத்தொடங்கியது. கடந்த மார்ச் மாதம் முதன் முறையாக தங்கம் விலை ரூ.50,000ஐ தொட்டது.

இதுவே, இதுவே தற்போதைய உட்சபட்ச விலை என்று கூறி வந்த ஆடுத்தடுத்த நாட்களில், தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டியது தங்கம்.


கடந்த 13ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 குறைந்தது. தங்கம் விலை மேலும் குறையலாம் என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில், 14ம் தேதி பவுனுக்கு ரூ.600 அதிகரித்தது.  நேற்று தங்கம் விலை குறிப்பிடத்தக்க வகையில் சரிவை சந்தித்தது. பவுனுக்கு ரூ.520 குறைந்த நிலையில் இன்று மீண்டும் விலை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80ம், பவுனுக்கு ரூ.640ம் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.6,870க்கும் ஒரு பவுன் ரூ.54,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.66ம் பவுனுக்கு ரூ.528ம் விலை அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,628க்கும் ஒரு பவுன் ரூ.45,024க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.90.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.90,500 க்கும் விற்பனையாகிறது.





சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw