இளைஞர்களே உஷார்; ஆப்-ல் பேசி ஜாலியாக இருக்கச்சென்ற கோவை புதுமாப்பிள்ளை மீது தாக்குதல்!

published 10 months ago

இளைஞர்களே உஷார்; ஆப்-ல் பேசி ஜாலியாக இருக்கச்சென்ற கோவை புதுமாப்பிள்ளை மீது தாக்குதல்!

கோவை: ‘கிரிண்டர் ஆப்’ மூலமாக பழகி ஜாலியாக இருக்கச்சென்ற புது மாப்பிள்ளை மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது.

கோவை கீரநத்தம் பகுதியை சேர்ந்த 30 வயதான மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வரும் வாலிபர் கிரிண்டர் செயலியை அடிக்கடி பயன்படுத்தியதாக தெரிகிறது.

ஹோமோ செக்ஸில் விருப்பம் உள்ள நபர்களிடம் அவர் சாட்டிங் செய்து வந்துள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் அவர் சாட்டிங் செய்தபோது வாலிபர் ஒருவர் தனிமையில் சந்திக்க விரும்புவதாக கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து அவரை சந்திக்க நேற்று முன்தினம் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பின்புறம் சென்றுள்ளார். அங்கே வந்த வாலிபர் அவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது புதர் மறைவில் மறைந்திருந்த இன்னொரு வாலிபர் அங்கே வந்தார். அவரும், கிரிண்டர் ஆப்பில் பழிகிய வாலிபரும் இணைந்து மென் பொறியாளரை தாக்கி பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

அவர் பணம் இல்லை எனக் கூறியபோது அவரது ஆடைகளை களைந்து தொடர்ந்து மிரட்டியுள்ளனர். ஜிபே மூலமாக பணம் அனுப்ப சொல்லியுள்ளனர். ஆனால் அவர் பணமில்லை எனக் கூறியபோது அவரது செல்போனை பறித்து அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இது தொடர்பாக அந்த வாலிபர் கொடுத்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட வாலிபருக்கு இன்னும் 3 நாளில் திருமணம் நடக்க உள்ளது.‌ இந்த நிலையில் அவர் ஆபாச செயலி நண்பரை சந்திக்க சென்று தாக்குதலில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சரவணம்பட்டி பகுதியில் இதேபோல் வாலிபர்கள் சிலர் கிரிண்டர் செயலி மூலமாக பழகிய நபர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe