சென்னை-கோவை சிறப்பு ரயில்கள்: விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, திண்டுக்கல் வழியே செல்கிறது...!

published 10 months ago

சென்னை-கோவை சிறப்பு ரயில்கள்: விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, திண்டுக்கல் வழியே செல்கிறது...!

கோவை: விழுப்புரம், கடலூர் மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், கும்பகோணம் வழியாக சென்னை எக்மோரில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

வாக்களிக்க சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு இச்செய்தியை பகிர்ந்து உதவிடுங்கள்.

சிறப்பு ரயில்கள் குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு கூட்டத்தையும்,  போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு சென்னை எழும்பூர் - கோவை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

ரயில்கள்

 ·         ரயில் எண்.06003 சென்னை எழும்பூர் - கோயம்புத்தூர் இடையே சிறப்பு ரயில் 18 & 20 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.25 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 8.20 மணிக்கு கோவை மத்திய ரயில் நிலையம் வந்தடையும்.

·         ரயில் எண்.06004 கோயம்புத்தூர்கோவை மத்திய ரயில் நிலையம் -சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் 19 & 21 ஆகிய தேதிகளில் கோவையிலிருந்து இரவு 8.40 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 10.05 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும்.

பெட்டிகள்

ஏசி 3-அடுக்கு - 2, ஸ்லீப்பர் வகுப்பு - 7, பொது இரண்டாம் வகுப்பு - 7 & லக்கேஜ்-கம்-பிரேக் வேன் - 2 கோச்சுகள்.

நிறுத்தங்கள்

தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், மயிலாடுதுறை,

கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மணப்பாறை, ஊஞ்சல்பட்டி, ஊஞ்சட்டைமலை, திண்டுக்கல் மற்றும் போதனூர்.

இவ்வாறு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe