குறைந்த முதலீடு அதிக லாபம் என கூறி கோவை வியாபாரியிடம் லட்சக்கணக்கில்; உஷாரா இருங்க!

published 2 weeks ago

குறைந்த முதலீடு அதிக லாபம் என கூறி கோவை வியாபாரியிடம் லட்சக்கணக்கில்; உஷாரா இருங்க!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/J30Hw99ftHR2wHiYb8sllV

கோவை: கோவை போத்தனூர் கோணவாய்க்கால்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (56). நூல் வியாபாரி. இவர் ஆன்லைனில் பகுதி நேர வேலை இருக்கிறதா என்று பார்த்துள்ளார்.

அப்போது ஒரு மணி நேர பகுதிநேர வேலை இருப்பதாக வந்த செல்போன் லிங்கில் இருந்த செல்போன் எண்ணில் நடராஜன் தொடர்பு கொண்டார். அப்போது அதில் பேசிய நபர் தாங்கள் முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக கூறியுள்ளனர்.


இதற்காக அலிசெஸ் என்ற செயலியை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். அந்த செயலியை நடராஜன் பார்த்தபோது, முதலீட்டுக்கு தகுந்த லாப தொகையை தருவதாக கூறியதால், நடராஜன் தன்னிடம் இருந்த பணத்தை படிப்படியாக அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் அனுப்பி உள்ளார்.

மேலும் நடராஜன் செலுத்திய தொகை பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோசடி நபர்களும் போலி கணக்கை அவருக்கு அனுப்பி வைத்துள்ளனர். 19.79 லட்ச ரூபாய் அனுப்பியபின், லாப தொகை, மற்றும் செலுத்திய தொகை திரும்ப வராதபோதுதான் ஏமாற்றப்பட்டதை நடராஜன் அறிந்தார்.


அவர்களிடம் தொடர்பு கொண்டபோது ரூ.4 லட்சத்து 79 ஆயிரத்தை மட்டும் திரும்ப கொடுத்துள்ளனர். தன்னிடம் பணத்தை மோசடி செய்துவிட்டதாக நடராஜன் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் 15 லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw