கட்சிக்காரர்களே கவனம்; சமூக வலைதளங்களை 'கவனமா யூஸ்' பன்னுங்க! இல்லேன்னா சிறை!

published 10 months ago

கட்சிக்காரர்களே கவனம்; சமூக வலைதளங்களை 'கவனமா யூஸ்' பன்னுங்க! இல்லேன்னா சிறை!

கோவை: தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வடையும் நிலையில் சமூக வலைதளங்களிலும் பிரசாரம் கூடாது என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். இன்று மாலை பிரச்சாரம் ஓய்ந்த பிறகு எந்தவொரு அரசியல் கட்சியும் வேட்பாளரும் வாக்குச் சேகரிப்பில் ஈடுபடக் கூடாது. 

பேஸ்புக், வாட்ஸ் ஆப், எக்ஸ் வலைதளம் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களில் பிரச்சாரம் செய்யக் கூடாது. மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரம் மேற்கொள்பவர்களுக்கு 2 ஆண்டு தண்டனை விதிக்கப்படும். அல்லது அபராதம் விதிக்கப்படும். 

வெளியூரிலிருந்து பிரச்சாரம் மேற்கொள்ள வந்தவர்கள் மாலை 6 மணிக்கு மேல் தொகுதியில் இருக்கக் கூடாது. அரசியல் கட்சியினர் வாக்காளர்களை தங்கள் வாகனங்களில் வாக்குச் சாவடிக்கு அழைத்து வரக் கூடாது. 

தேர்தல் முகவர் ஒரு வாகனத்திலும் கட்சிக்காரர்கள் ஒரு வாகனத்திலும் பயணிக்க வேண்டும். வாக்குச் சாவடிக்கு 200 மீட்டருக்கு முன்பே அரசியல் கட்சியினர் தங்கள் தற்காலிக கூடாரத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். 

அங்கு இரு நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாகன அனுமதி மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுக்கென ஒரு வாகனத்தில் பயணிக்கலாம். 

எந்த ஒரு தேர்தல் விவகாரத்தையும் திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்எம், ரோடியோ, வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டா, டிவிட்டர் போன்ற சாதனம் வாயிலாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது.

இவ்வாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. எனவே கவனமாக களப்பணியாற்றுங்கள், கட்சிப் பணியாற்றுங்கள் கட்சிக்காரர்களே.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe