கோவை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்...

published 2 weeks ago

கோவை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்...

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/GKcHrWOaZYqGX1TFQywYIz

கோவை: ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  கோவை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள அனைத்து வாக்கு சாவடிகளில் இருந்தும் தேர்தல் முடிந்த பின்பு வாக்கு பதிவு இயந்திரங்கள் கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரிக்கு(GCT) கொண்டுவரப்பட்டு பலத்த பாதுகாப்புடன் இருப்பு வைக்கப்படும்.

அதனைத் தொடர்ந்து ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கையானது நடைபெற உள்ளது. நாள்தோறும் போலீசார் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்கும் பணிகளில் ஈடுபடுவர். மேலும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.


இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தினை கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  அங்கு உள்ள பாதுகாப்பு வசதிகள் அனைத்தையும் ஆய்வு செய்த அவர் சில அறிவுரைகளையும் அதிகாரிகளுக்கு வழங்கினார்.


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw