ஓட்டுப்போட இலவச பேருந்து வசதி.. கோவை போக்குவரத்து கழகம் அறிவிப்பு- யார் யாருக்கு என்ற விவரங்கள்...

published 10 months ago

ஓட்டுப்போட இலவச பேருந்து வசதி.. கோவை போக்குவரத்து கழகம் அறிவிப்பு- யார் யாருக்கு என்ற விவரங்கள்...

கோவை: நாடாளுமன்ற தேர்தல் நாளைய தினம்(19.04.2024) நடைபெற உள்ளது. இந்நிலையில் போக்குவரத்து கழகம் சார்பில் ஓர் அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.

அதில் 19.04.2024 அன்று நடைபெறும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக தேர்தல் தினத்தன்று மட்டும் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்து வாக்களிக்க பயணம் மேற்கொள்ளும் 60 வயத்திற்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள், பார்வை குறைபாடு மற்றும் அனைத்து மாற்றுத் திறனாளிகளையும்  போக்குவரத்து கழக சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் எவ்வித பயணச்சீட்டும் வழங்காமல் கட்டணமின்றி 19.04.2024 அன்று காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை வாக்களிக்க அழைத்துச் செல்ல அனைத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது என அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe