18 ஆண்டுகளுக்கு பின்.. மீண்டும் சினிமாவில் இணைந்து நடிக்கும் சூர்யா - ஜோதிகா!

published 10 months ago

18 ஆண்டுகளுக்கு பின்.. மீண்டும் சினிமாவில் இணைந்து நடிக்கும் சூர்யா - ஜோதிகா!

18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சூர்யா - ஜோதிகா ஜோடி இணைந்து  நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

1999ம் ஆண்டு வெளியான 'பூவெல்லாம் கேட்டுப்பார்' திரைப்பத்தில் சூர்யா - ஜோதிகா  முதன் முதலாக இணைந்து நடித்தனர். தொடர்ந்து இந்த ஜோடி உயிரிலே கலந்தது, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், மாயாவி உள்ளிட்ட திரைப்படங்களில்   இணைந்து நடித்தனர்.

இதனையடுத்து 2006ம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்தோடு சூர்யா - ஜோதிகா இருவரும்  திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து ஜோதிகா  விலகி இருந்தார். பின்னர் '36 வயதினிலே' திரைப்படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுத்தார்.  தொடர்ந்து காற்றின் மொழி, பொன்மகள் வந்தாள், நாச்சியார், மகளிர் மட்டும் போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்தார்.  

மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக 'காதல் தி கோர்' மற்றும் அஜய் தேவ்கன் ஜோடியாக பாலிவுட்டில் 'ஷைத்தான்' படத்திலும் நடித்திருந்தார். அண்மையில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் ஒன்றாக இணைந்து ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி இருந்தது.

இந்நிலையில், தற்போது 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சூர்யா - ஜோதிகா ஜோடி இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அந்த படத்தை சில்லு கருப்பட்டி படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம் அல்லது பெங்களூர் டேஸ் என்ற மலையாள படத்தை இயக்கிய அஞ்சலி மேனன் இயக்குவார் என சொல்லப்படுகிறது.  இப்படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில்  வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe