கோவையில் வாகனம் நிறுத்துவதில் கைகலப்பு- ஆபத்தான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி...

published 2 weeks ago

கோவையில் வாகனம் நிறுத்துவதில் கைகலப்பு- ஆபத்தான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி...

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/BECRyb4cFcSLk2dVyBE1vu

கோவை: கோவையில் குடிபோதையில் வாகனம் நிறுத்துவதில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட கைகலப்பில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் அனுமதக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக 10 பேரை காவல்துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியை சார்ந்த விஜயன்-36  ஜோஸ் - 34 ஆகியோர் மதுக்கரை அட்லாண்டிக் நகர் பகுதியில் வாடகை வீட்டில் கடந்த 4 வருடங்களாக குடியிருந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கூலி தொழில் (கொத்தனார்) வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கும் இதே பகுதியை சார்ந்த குகன் - 22  என்பவருக்கும் கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பு வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. 


இந்நிலையில் அதே பகுதியில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சொந்தமான காலியிடத்தில் மதுக்கரை பகுதியை சார்ந்த 1)குகன் -22,  2) தனுஷ் குமார் -22, 3) சக்தி சாய் சூர்யா - 22, 4) சிவராஜ் - 25, 5) மோகன் பிரசாத் -20, 6) தவசீலன் - 20, 7) ரித்தீஷ் -18 (E - COMMERCE 2ND YEAR - SNMV ARTS AND SCIENCE COLLEGE), 8) ஷாஜகான் - 20, 9) விஜய் -24, 10) மைத்தீஸ்வரன் -17, த/பெ தண்டபாணி ஆகியோர் ஒரு குழுவாகவும், விஜயன் மற்றும் ஜோஸ் ஆகியோர் ஒரு குழுவாகவும் அமர்ந்து மது அருந்தி கொண்டு இருந்து உள்ளனர். 

அப்பொழுது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் குகன் மற்றும் அவரது நண்பர்கள் 10 பேர் சேர்ந்து விஜயனை கீழே தள்ளி காலால் எட்டி உதைத்து உள்ளனர். ஜோஸ் என்பவரை கல்லால் தாக்கியதில் வலது பக்க கண்ணத்தில் காயம் ஏற்பட்டு உள்ளது. பின்பு இருவரும் மதுக்கரை பகுதியில் உள்ள நடராஜ் தனியார் மருத்துவமனையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது தானாக கீழே விழுந்ததாக கூறி உள் நோயாளியாக சிகிச்சையில் சேர்ந்து உள்ளனர். 


மணிக்கு விஜயனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உள்ளது. இதனால் மேல் சிகிச்சைக்காக கோவை பி.எஸ்.சி மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்து உள்ளனர். மேற்படி சம்பவம் தொடர்பாக ஜோஸ் என்பவரிடம் வாக்குமூலம் பெற்று மதுக்கரை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw