TNPSC குரூப் 1 B & C அறிவிப்பு: 29 பணியிடங்கள்... 2 லட்சம் வரை சம்பளம்! உடனே விண்ணப்பிங்க!

published 9 months ago

TNPSC குரூப் 1 B & C அறிவிப்பு: 29 பணியிடங்கள்... 2 லட்சம் வரை சம்பளம்! உடனே விண்ணப்பிங்க!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  உதவி ஆணையர் (AC), மாவட்டக் கல்வி அலுவலர் (DEO) ஆகிய பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு இந்து சமய அறநிலைய பணி - உதவி ஆணையர்  (பணியிடங்கள்  எண்னிக்கை 21)

தமிழ்நாடு பள்ளிக் கல்வி பணி - மாவட்டக் கல்வி அலுவலர்  (பணியிடங்கள்  எண்னிக்கை 8)

கல்வி

உதவி ஆணையர் :  அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் சட்டம் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 3 ஆண்டுகள் வழக்கறிஞராக அல்லது 6 ஆண்டுகள் அறநிலையத் துறையில் ஏதேனும் ஒரு பதவியில் பணிபுரிந்திருக்க வேண்டும்.

மாவட்டக் கல்வி அலுவலர்:  தமிழ் கட்டாயமாக கொண்டு கணிதவியல்/ இயற்பியல்/வேதியியல்/ தாவரவியல்/விலங்கியல்/ பொருளியல்/ புவியியல்/ வரலாறு/ வணிகவியல் ஏதேனும் ஒரு துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  B.ed பட்டம் பெற்றிருக்கவேண்டும். ஆசிரியராக  இருப்பவர்கள்  12  ஆண்டுகள் ஆசிரியர்  அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்

மேற்கண்ட பணியிடங்களுக்கு ரூ. 56,100 முதல் ரூ. 2,09,200 வரை பதவிக்கு ஏற்ப மாத சம்பளமாக வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?  

விண்ணப்பதாரர்கள்  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 22.05.2024 ஆகும்.

தேர்வு  முறை

இரண்டு பிரிவு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.  

அதிகார பூர்வ அறிவிப்பு

மேலும் விபரங்களுக்கு https://www.tnpsc.gov.in/Document/tamil/05_2024_TAM_.pdf என்ற அதிகார பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe